Header Ads



இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

இந்தோனேஷியா நாட்டின் ஜாவா தீவில் இன்று அதிகாலை 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கின.

நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளையத்தில் இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது. இங்குள்ள ஜாவா தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

ஆனால், நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

ஜாவா சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கடியில் சுமார் 91 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.