Header Ads



மறுமை நாளில், அல்லாஹ்வின் ரஹ்மத் என்ற போர்வைக்குள் மறைய வேண்டுமா..?


م
السلام عليكم ورحمة الله وبركاته
மஹ்ஷர் மைதானத்தில் கேள்வி கணக்கு கேட்கப்படும்போது இறைவன் ஒரு மனிதனை தன் ரஹ்மத் என்ற போர்வைக்குள் மறைத்து யாருக்கும் தெரியாமல் உலகில் நீ இந்த நேரத்தில் இந்த நொடிகளில் இந்த தவறுகளை செய்தாயா என கேட்பான்.

அம்மனிதனும் ஆம் என்று கூறுவான்.

இறைவன் சிறு சிறு தவறுகளை விசாரிப்பான். இந்த மனிதனுக்கு பயம் வந்துவிடும். சிறு தவறைக்கூட விடாமல் இறைவன் கேட்கிறானே நம் கதி என்ன ஆகுமோ என நடுங்குவான்.

இறைவன் சிறித்துக்கொண்டே பயப்படாதே உலகில் நீ ஒரு மனிதனின் தவறை மறைத்தாய் அதற்க்கு பேருபகாரமாக நீ செய்த தவறுகளையும் மஹ்ஷர் மைதானத்தில் இந்த மக்களுக்கு முன்னால் மறைக்கிறேன்.

அது மட்டுமில்லாமல் உண் சிறு பாவங்களை நன்மையாக மாற்றிவிடுகிறேன் என்பான்.

உடனே இம்மனிதன் (சிறு பாவங்களை இறைவன் நன்மையாக மாற்றிவிட்டான் நம் பெரும்பாவங்கறையும் நன்மையாக மாற்ற வேண்டும் என்ற ஆசையில்) இறைவா இதுமட்டுமல்ல நான் பெரிய பாவங்களையும் செய்திருக்கிறேன் என்று பட்டியல் போட ஆரம்பித்துவிடுவான் (உடனே இறைவன் சிரிப்பான் இதைக்கூறிவிட்டு நபியவர்களும் தன் கடவாய்பற்க்கள் தெரியுமளவிற்க்கு சிரிக்கிறார்கள்)

இறைவன் உண் சிறு பெரு பாவங்களை மன்னித்தேன் மறைத்தேன் நன்மையாக மாற்றினேன் சுவர்க்கம் செல் என்று கூறிவிடுவான்.

எந்த செயலில் இறைப்பொருத்தம் இருக்கிறது என்று நமக்கு தெரியாது.

பிறர் தவறுகளை மறைப்பதில் இறைப்பொருத்தம் இருக்கிறது என்பதை நாம் விளங்கலாம்.

எனவே பிறரை நாம் கண்ணியமாக நடத்தினால் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நம்மை கண்ணியமாக்குவான்.

பிறரை நாம் இழிவுபடுத்தினால் நாம்தான் முதலில் இழிவடைவோம் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்!!*
*அல்ஹம்துலில்லாஹ்*
*அல்ஹம்து லில்லாஹ்*
*அல்ஹம்துலில்லாஹ்!!!*
*அல் குர்ஆண் ஹதீஸ்
*தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள்!*

3 comments:

Powered by Blogger.