Header Ads



சவுதி அரேபியாவை தாக்கவந்த, ஏவுகணை தாக்கி அழிக்கப்பட்டது.


சவுதி அரேபியாவின் நகரை தாக்க வந்த பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கி அழிக்கப்பட்டது.

ஏமனில் உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் செயல்பட்டு வருகின்றன.

எனவே சவுதி அரேபியாவை பழிவாங்குவதற்காக ஹவுதி போராட்டக்காரர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்த முயற்சி செய்கின்றனர்.

கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் ரியாத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணையை சவுதி ராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்தது.

இந்நிலையில் நேற்று மீண்டும் தென்கிழக்கு பகுதியில் உள்ள Khamis Mushait நகரை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை வீசப்பட்ட நிலையில் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை சவுதி தலைமையிலான கூட்டுப்படையின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் Turki al-Maliki உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் எவ்வித ஆபத்தும், சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் எங்கு எப்படி தாக்கி அழிக்கப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

இச்சோதனை முயற்சி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக ஹவுதி போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. While we are now welcoming this attack by these radicals Saudi should come to table and talk with all parties in Yemen. This is becoming dangerous trend ...end of the Saudi will face a lot of trouble..
    Because Saudi need to be clearer enough to deal with it all its neighbours
    It should know what it's enemy want from it ..
    They want to make Saudi weak and poor by this type of war and devide it into three parts. M

    ReplyDelete
  2. (இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும்.
    (அல்குர்ஆன் : 2:166)

    ReplyDelete
  3. சவூதியின் மூன்றாவது நாடகம்.

    ReplyDelete

Powered by Blogger.