December 22, 2017

ஜெருசலேம் அறிவிப்பை மீளப்பெறு, டாலர்களுக்காக ஜனநாயகத்தை விற்று விடாதீர்கள் - எர்துகான் விளாசல்


அமெரிக்கா தரும் சொற்ப டாலர்களுக்காக ஆசைப்பட்டு உங்கள் நாட்டின் ஜனநாயகத்தை அமெரிக்காவிடம் விற்று விடாதீர்கள் என உலக தலைவர்களை துருக்கி அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது. 

டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் வாக்களித்தன. இந்த தீர்மானத்தை எதிர்த்து அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் வாக்களித்தன.

இந்நிலையில், தனது முடிவை எதிர்த்து வாக்களித்த நாடுகளுடனான அமெரிக்காவின் உறவுகளை மறுசீராய்வு செய்ய நேரிடும் என்னும் பாணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா தரும் சொற்ப டாலர்களுக்காக ஆசைப்பட்டு உங்கள் நாட்டின் ஜனநாயகத்தை அமெரிக்காவிடம் விற்று விடாதீர்கள் என உலக தலைவர்களை துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜனநாயகத்தின் தொட்டில் என்று தன்னைத்தானே அழைத்துகொண்டு, உலகின் எந்த பகுதியிலும் தனது விருப்பத்தை டாலர்களால் வாங்கி விடலாம் என்னும் அமெரிக்காவின் எண்ணம் ஐ.நா. தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் தொடர்பான அறிவிப்பை டொனால்ட் டிரம்ப் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

சொற்ப டாலர்களுக்காக ஜனநாயகத்தை அமெரிக்காவிடம் விற்று விடாதீர்கள் என உலக நாடுகளை நான் கேட்டுக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

7 கருத்துரைகள்:

This Jerusalem issue is a divine lesson to Muslim world..
Either you unite or you will be wiped out ..

This is the time for muslim's all world unite. Very very dangerous situation we will face in future if we are fail.
Think twice.

128 நாடுகளிளும் தொடர்புகளை தூண்டித்தால் நஷ்டம் அமேரிக்காவுக்கே. ஆதரவளித்த ஒருநாட்டிலலும் கொள்ளையிட முடியாது. வருடப்படு்ம் நாடுகள் அனைத்ததும் 128 இல் அடங்கும். ஆனால் பாருங்கள் யஹூதி நஸாராவின் மனதைரியத்தை? மிரட்டினால் பயப்படுவர் என்ற எண்ணம் எந்தளவிற்கு அவனுக்கு தன்நம்பிக்கை அளிக்கிறதென்று!!!

1924 களில் இடம்பெற்ற உஸ்மானிய பேரரசின் வீழ்ச்சியினை தொடர்ந்து இஸ்லாமிய உலகு சிதைவடைந்து தலைமைத்துவமும் இழக்கப்பட்டது.
இன்றைய துருக்கியின் நிலை ஓரளவு ஆறுதலாக இருப்பினும் நீண்டகால நிலைத்திருப்புமீதான ஐயப்பாடு அதன் கடந்த கால வரலாற்றை திரும்பிப் பார்க்கையில் புலப்படுகிறது.
முஸ்லிம் உலகு இஸ்லாமிய மூலக்கோட்பாடுகள் சிதைவுறாது அறிவியல் துறையில் ஆழமாக கால்பதித்து தமது சொந்தப் காலில் நிற்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அல்ஜிப்றான்களையும் இப்னுசீனாக்களையும் மீளாக்கம்செய்ய வேண்டும்.
சிலுவை யுத்தங்களாலும் மொங்கோலிய படையெடுப்புக்களாலும் சூறையாடப்பட்ட இஸ்லாமிய நூலகங்கள் புனரமைக்கப்பட வேண்டும். பல்வேறு தளங்களிலும் ஆராய்ச்சிக்கான அதிக வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். புத்தாக்கங்களுக்கும் புதிய நுட்பங்களுக்கும் வழிசமைக்க வேண்டும். இதற்காக தமது செல்வங்களை ஒதுக்க வேண்டும். இவை இத்தனைக்கும் அரச இயந்திரம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
இத்தனையும் சாத்தியமா? ஆம் முயற்சி செய்தால் இன்ஷா அல்லாஹ் நனவாகும். முயற்சி இல்லையேல் கனவாகும்.

இரட்டை வேடம் போடாதீர் ஒர்டுகான் அவர்களே!

Al Arabiya EnglishThursday, 22 December 2016

Saudi Arabia has released the budget expenditures for 2017; more than a third of its expenses will be in two key emerging sectors: the education with more than 200 billion riyals, and the health and social development sector with 120 billion riyals.

The figures allocated for the education and health and social development sectors represent 36% of the total estimated budget amounting to 890 billion riyals.

So far I know only the GOOD side of Turkey President. May Allah Keep us Making Dua For all the Muslims leaders.

Post a Comment