Header Ads



ஜனாதிபதியினுடயை கரங்களை பலப்படுத்த, ஹிஸ்புல்லாஹ் அழைப்பு

-அனா-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நல்லதொரு ஆட்சியை உருவாக்கி அதனூடாக சமுகங்கள் மத்தியிலே இருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு எதிர்காலத்திலே இந்த நாட்டை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற ஒன்றுபட வேண்டும் என்று மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்; தெரிவித்தார்.

அல் கிம்மா நிறுவனத்தின் ஏற்பாட்டில் றவ்ழதுல் அத்பால் முன்பள்ளியின் 03வது மாணவர் வெளியேற்று நிகழ்வும் அல் கிம்மா விளையாட்டு கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வும் மீறாவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளருமான மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

நாட்டை அபிவிருத்தி செய்யும் ஜனாதிபதியின் முயற்சிக்கு வெற்றியழிப்பதற்கு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்களிப்பது ஒரு முக்கியமான அம்சமாகும் எதிர்காலத்தில் அமையப் போகும் பிரதேச சபைகள் ஒரு குட்டி பாராளுமன்றம் போன்று செயற்படஇருக்கின்றது

இம் முறை பிரதேச சபை தேர்தல் ஒவ்வொரு வட்டாரமாக பிரிக்கப்பட்டுள்ளது இதில் ஓட்டமாவடி பிரதேச சபை பதினொரு வட்டாரமாக பிரிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொருவர் நியமிக்கப்படவுள்ளார் அந்த வட்டாரத்து மக்கள் தங்களது பிரதிநிதியை தெரிவு செய்ய வேண்டும் அவ்வாரு தெரிவு செய்யப்படுகின்றவன் அரசாங்கத்தின் ஜனாதிபதியின் பிரதிநிதியாக வருகின்போது அதிகமான பணிகளை செய்யமுடியும் அவருக்கு நேரடியாக நிதிகளைப் பெற்றுக் கொள் வேண்டும் அதனால் இந்த சந்தர்ப்பத்தை இப்பகுதி மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏன் என்றால் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு எங்களுடைய ஆட்சிதான் நடக்கப் போகின்றது அதனால் இப்பிரதேசத்து மக்கள் ஒற்றுமைப்பட்டு எதிர்காலத்திலே ஜனாதிபதியினுடயை கரங்களைப்பயன்படுத்தி ஜனாதிபதியின் ஆட்சியோடு இணைந்து செயற்படக்கூடிய ஒருவரை உங்களுடைய பிரதிநிதியாக நீங்கள் தெரிவு செய்கின்றபோது அதிகமான பணிகளை அபிவிருத்திகளைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

அதிகமான தேவைகளையும் அபிவிருத்தியையும் வேண்டிநிற்கின்ற ஒரு பிரதேசம் ஓட்டமாவடி பிரசே சபை எல்லைக்குட்பட்ட பிரதேசம் விளையாட்டுத்துரையாக இருக்கலாம் கல்வியாக இருக்கலாம் சுகாதாரமாக இருக்கலாம் இவ்வாரு பல்வேறு தேவைகளை வேண்டிநிற்கின்ற பிரதேசம் இந்த கல்குடா பிரதேசம் ஆகவே இப்பகுதி மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் அதிமேதகு ஜனாதிபதியோடு சேர்ந்து செயற்படக்கூடியவர்களை வட்டா உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டும் நேர்மையாக உங்களுக்காக பாடுபடக்கூடிய கல்வி அறிவுள்ள இலஞ்சம்பெறாத நல்ல நேர்மையானவர்களை தெரிவு செய்ய வேண்டும் அப்போதுதான் உங்கள் பிரதேசம் அபிவிருத்தி காணும் என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.