Header Ads



தகாத வார்த்தைகளால், நாறிய பாராளுமன்றம்

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது, அமைச்சர் சரத் பொன்சேகாவும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேயும் தகாத வார்த்தைகளால் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.

வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்று அமைச்சர் சரத் பொன்சேகாவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் குறித்த விவாதம் இடம்பெற்றது.

இதன்போது, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே, அமைச்சர் சரத் பொன்சேகாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்து அவமானப்படுத்தினார்.

இதையடுத்து சரத் பொன்சேகாவுக்கும் காமினி லொக்குகேக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இருவரும் ஒருவர் மீது மற்றவர் மிருகங்களின் பெயர்களைக் கூறியும் இழிவான சொற்களாலும் விமர்சித்தனர்.

அப்போது சபைக்குத் தலைமை தாங்கிய ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இரண்டு உறுப்பினர்களும் பயன்படுத்திய நாடாளுமன்ற மொழிக்கு ஒவ்வாத வார்த்தைகளை பதிவேடுகளில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன்,“இரண்டு பேரும்  என்ன செய்கிறீர்கள்? நீங்கள் நாடாளுமன்றத்தையும், உங்களைத் தெரிவுசெய்த மக்களையும் இழிவுபடுத்துகிறீர்கள்,வேறெங்காவது போய் உங்கள் விவாதத்தை வைத்துக் கொள்ளுங்கள்” என்று சபைக்குத் தலைமை தாங்கிய பிமல் ரத்நாயக்க காட்டமாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.