Header Ads



பசில் ராஜபக்ஷ, என்னை எச்சரித்தார் - டிலந்த

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் வில்பத்து விடயம் தொடர்பில் தாம் குரல் கொடுத்த  போது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்தார் என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

உனக்கு அரசியல் விளங்குவதில்லையென நாம் வில்பத்து தொடர்பில் குரல் கொடுத்த போது பசில் ராஜபக்ஷ தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்தார்.

எனக்கு எந்தவொரு அரசாங்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற தேவை கிடையாது. இருப்பினும், நடந்த உண்மையை கூற தயங்கமாட்டேன். வில்பத்து பிரச்சினை மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே ஏற்பட்டது. ராஜபக்ஷ அரசாங்கம் அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனைப் பாதுகாத்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வில்பத்து விவகாரம் தொடர்பில் கண்டறிய ஆணைக்குழு அமைக்க தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் அவர் மேலும் அறிவித்துள்ளார். DC

4 comments:

  1. Unfortunately, No presidential commission to inquire into whether Muslim IDP"s who were ethnic cleansed by the LTTE were adequately compensated and resettled. Once that is done only Wilpattu Commission report will have any validity.

    ReplyDelete
  2. கொடுத்த பணம் நன்றாக வேலை செய்கிறது.

    ReplyDelete
  3. கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்து விட்டு தற்போது இலங்கையின் காவலர்கள் மீண்டும் கிளம்பி விட்டார்கள் முஸ்லிம் சமுதாயத்தின் தலைவரை காப்பாற்ற.. பணம் பலதும் செய்யும்...

    ReplyDelete
  4. இவனுக்கு முப்தி மென்க் குர்ஆனை கொடுத்தாலும், இவன்தேடின கேடு இவன அடயாம விடாது.

    ReplyDelete

Powered by Blogger.