Header Ads



ஸ்ரீயானி ஏன், ஜனாதிபதியுடன் இணைந்தார்? கம்மன்பில சொல்லும் காரணம்

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீயானி விஜேவிக்ரமவிடம் எந்த கொள்கை ரீதியான பிரச்சினைகளும் இருக்கவில்லை என்பதுடன் அவரிடம் அதிருப்தியும் காணப்படவில்லை.

வேட்புமனு குழு நியமிக்கப்பட்ட பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டது.

அம்பாறை மாவட்ட தலைவர்கள் ஆறு முறைக்கும் மேல் தேசிய வேட்புமனு குழுவை அழைத்தனர். சில தலைவர்கள் அதில் கலந்துகொள்ளவில்லை. இதனால், ஸ்ரீயானி விஜேவிக்ரம அலைக்கழிக்கப்பட்டார். இறுதியில் ஏற்பட்ட நிலைமையில் அரசியல் கொலை நடந்தது.

அரசாங்கத்தின் கடந்த மூன்று வருட ஆட்சி தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மாற்ற வேண்டிய நேரத்தில் மிகவும் தூர நோக்குடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை செய்ய முடியாத அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பவே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தமது ஆதரவாளர்களுக்கு பிரதேசசபை உறுப்பினர் பதவிகளை பெற்றுக்கொடுக்க இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை.

வேட்புமனுவுக்காக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியுமாயின் மக்கள் அரசியல்வாதிகள் மீது எப்படி நம்பிக்கை கொள்வர்.

துயரமும் கோபமும் அணைந்து போன பின்னர் ஸ்ரீயானி விஜேவிக்ரம தனது மனதை மாற்றிக்கொள்வார் என எதிர்பார்ப்பதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இந்த செய்தியில் கருத்துத் தெரிவிப்பவர் உடனடியாக மனநோயாளர் வைத்தியசாலைக்கு அனுப்பபட வேண்டியவர். தாமதிப்பது இன்னும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    ReplyDelete

Powered by Blogger.