Header Ads



யாசீனின் முன்னறிவிப்பும், டிரம்பின் அறிவிப்பும்..!


1987 களில் தொடங்கிய முதல் இன்திபஃதா இஸ்ரேலின் இருப்பையும் துடிப்பையும் கேள்விக்குள்ளாக்கியது.

5000 பாலஸ்தீன முஸ்லிம்களைக் கொன்று விட்டு வீராய்ப்பாய் கை வீசி நக்கலாய் நடந்து கொண்டிருந்த இஸ்ரவேலர்களின் தொடக்கம் அது.

பாலஸ்தீனம் எனும் திறந்தவெளி சிறைச்சாலை என உலகமே உதட்டோர நக்கலை நகைப்பை வெளிப்படுத்தியக் காலம் அது.

அதை எதிர்க்க கொஞ்சமும் பாத்தியதையில்லாத உடல்நலிவுற்ற ஷேக் அஹ்மத் யாசீன் رحيم الله சொன்னார்கள்,

அல்குர்ஆன் எங்களுக்கான முன்மாதிரி, 80 வருடங்கள் காத்திருக்க சொல்கிறது. 80 ஆவது வருடம் இஸ்ரேல் அழியும் பாலஸ்தீன் முழுமையாய் விடுதலை அடையும்.

ஜெருஸலமும் பைத்துல் முகந்தஸும் மீண்டும் மலரும் ஒளிரும்.

புத்திப் பேதலித்தவன் போல் கனவு காண்கிறார் பெரியவர் என நாகரிகமாய் கேலியாய் விமர்சித்த உலகம்.

1990 களில் இஸ்ரேலிய ராணுவத் தலைமையின் ஒப்புதல் வாக்குமூலத்தால் முதன்முதலில் பீதியடைந்தது. இஸ்ரேலிய இராணுவம் சொல்லியது,

அடுக்கி நிறுத்தப்பட்ட எங்களின் பீரங்கிகளும், உயரப்பறந்து கொத்து குண்டுகளை வீசும் விமானங்களும் சாதிக்காததை,  கையளவு வெடிமருந்தும் ஒருக்கருவியும் உயிர்ப்பலிக்கு தயாரான வீரமும் போதும் இஸ்ரேலை துடைத்து எறிய,  இந்த வார்த்தைகள் உலகை உலுக்கியது.

ஷேக் அஹ்மத் யாசீன் رحيم الله அவர்களை மொய்த்துக் கொண்டு காரணம் கேட்டது.

அதற்கு ஷேக் அஹ்மத் யாசீன் رحيم الله அவர்கள் அல் குர் ஆனை வாசியுங்கள் என்றார்கள்.

40 ஆண்டுகள் தன் தவறை திருத்த அடுத்த 40 ஆண்டுகள் இஸ்ரேலை முடிக்க, 
பிர் அவ்னின் திறந்த வெளிசிறைகளில் சொல்லொண்ணாக் கொடுமையை அனுபவித்த பனூ இஸ்ராயீல்களுக்கு இறைவன் வழங்கிய வாக்குறுதி அது...!

இன்றைய பிர் அவ்னாய் இஸ்ரேல்.

காத்திருக்கும் பனூ இஸ்ராயீல்களாய் இறையடியார்களாய் பாலஸ்தீனர்கள்...!
இஸ்லாமிய வேடமிட்ட முனாஃபிக்குகள் அரபுலக ராஜாக்கள் ஷேக்குகள் முப்ஃதிகள், என உலகம் முழுவதும் முன்னறிவிப்பிற்காய் காத்திருக்க.

2000 களில் தொடங்கிய 2 ஆவது இன்திஃபாதா டெல் அவீவின் விமானநிலையங்களை முடக்கியது. அசைக்க முடியாத இராணுவம் என்ற இஸ்ரேலின் இறுமாப்பை தகர்த்தது.

வீட்டுக்குள் வந்து போகும் மனிதர்களையும் படம்பிடிக்கத் தகுதியற்ற CCTV camera க்களையும் விடத் தரம்தாழ்ந்தது இஸ்ரேலின் radar என உலக தொழில்நுட்பம் இஸ்ரேலை காரித்துப்பியது.

இந்த சூழலில் 2028 ல் சுதந்திர பாலஸ்தீனத்தை, சிரியா, ஜோர்டான் எமன் உள்ளடக்கிய அகண்ட பாலஸ்தீனத்தை  Greater Palestine ஐ எங்கே? எப்படி? தேடுவோம் என உலகம் காத்திருக்க.

அமெரிக்கா 90 களில் ஈராக்கை அழிக்கத் தொடங்கி இன்று ஜெருஸலத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.

ஹமாஸ் மூன்றாவது இன்திஃபாதா விற்கு அழைப்புக் கொடுத்துள்ளது...

ஜெருஸலம் தலைநகரம் என்ற டிரம்பின் அறிவிப்பும்....

ஷேக் அஹ்மத் யாசீன் رحيم الله முன்னறிவிப்பும் இன்று ஒரே நேர்கோட்டில்..

இனி நடப்பவைகளை கண்மூடாது கவனிக்க வேண்டியது மிகமிக அவசியம். அல் குர் ஆன் பேசுவது உண்மை.

அல் குர் ஆனை ஆராய்வோர் சொல்வது உண்மை..

2028 ல் அகண்ட பாலஸ்தீனம் இன்ஷா அல்லாஹு உருவாகப் போவதும் உண்மை!


2 comments:

  1. Insha Allah engalai padaiththawan engalai sodhippan aanal all vida matan palastien muslimgalin kaiyil warum isrel endra dheseme irukkadhu.idhu nichchiyam

    ReplyDelete
  2. انشا الله நிச்சயமாக உருவாக்குவோம்...

    ReplyDelete

Powered by Blogger.