Header Ads



ஜெருசலேம் விவகாரத்தில் ரணில் விடாப்பிடி, அமெரிக்கா ஏமாற்றம், மைத்திரி மௌனம்


இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பிடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு உலக நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்தநிலையில், பலஸ்தீனம் தொடர்பான சிறிலங்காவின் கொள்கையில் மாற்றமில்லை என்றும், அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்க முடியாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.

இஸ்ரேலின் தலைநகராக ரெல் அவிவ் நகரையே சிறிலங்கா ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், அங்கிருந்து சிறிலங்கா தூதரகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.

இந்த நிலையில், சிறிலங்கா பிரதமரின் செயலகத்துக்குச் சென்ற அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப், ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

எனினும், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவு மத்திய கிழக்கின் அமைதிக்கு ஆபத்தாக அமையும் என்று சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறிலங்கா தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றவும் அவர் மறுப்பை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவின் இந்த நிலைப்பாடு அமெரிக்க தூதுவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கமாக சிறிலங்கா அரசின் அமைச்சர்கள், மற்றும் பிரமுகர்களுடனான சந்திப்புக் குறித்து கீச்சகப் பதிவுகளை இடும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், சிறிலங்கா பிரதமருடனான சந்திப்பு குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. எங்களது பிரச்சனைகளுக்கும் உரிமைகளுக்கும் கௌரவ மைத்திரி அவர்கள் எப்பதான் வாய்திறந்தவர். மேலும் கௌரவ ரணில் அவர்களும் தேர்தல் காலத்தைச்சுட்டி கொஞ்சம் அக்கறை காட்டுகிறார் இருந்தாலும் மைத்திரியைவிட கொஞ்சமாவது பேசுகிறாரே.

    ReplyDelete
  2. No you are totally wrong. This is election time. With the permission from Uncle Sam only he has given that message to the media.

    ReplyDelete
  3. Hon. My3 never open his mouth for shake of Muslims or muslim community. But still he is our president.. He was selected by us.. Mr. Azath will tell story for our president's silent... He will proof as president is correct.. because he is his leader...

    ReplyDelete
  4. We should not forget this government's earlier stands on this issue. UNP always take pro Israel stand when it comes to voting in UN. Mangala was demoted twice with this regard, once by Mahinda and once recently by Maithri.

    ReplyDelete

Powered by Blogger.