Header Ads



நான் நிரபராதியாவேன், சத்தியம் வெல்லும் - ரவி

சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, எதிர்வரும் 31ஆம் திகதி அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கும்போதே உண்மைகள் அம்பலமாகும் எனவும், நான் நிரபராதியாவேன் எனவும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31ஆம் திகதி) தமது விசாரணை அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளது. இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதிரடியான அரசியல் மாற்றங்கள் ஏற்படுமென தகவல்கள் கசிந்துவரும் நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்ட ரவி கருணாநாயக்க,

"கடந்த காலத்தில் ஊடகங்கள் என்னை வித்தைக்காரனாகப் பயன்படுத்தியிருந்தன. பிணைமுறி விவகாரம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட பின்னர் உண்மைகள் அம்பலமாகும் என்பதுடன் சத்தியம் வெல்லும். புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்கவே நான் அமைச்சுப் பதவியொன்றைத் துறந்திருந்தேன்'' என்றார்.

1 comment:

Powered by Blogger.