Header Ads



வெள்ளிக்கிழமை ஜும்மாவும், துண்டுப் பிரசுரங்களும்..!!


-அஜ்மல் மொஹிடீன்-

அரசியல்வாதிகளே,சமூக செயற்பாட்டாளர்களே உங்களுக்காக!, 

வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசல்களுக்கு வெளியே இரண்டு குழுவினரை காண்கின்றோம். ஒன்று வறுமையின் பிடியில் சிக்கிய ஒரு சிலர் தர்மம் கேட்டு நிற்பதும்,இரண்டாவது ஒரு சிலர் துண்டுப் பிரசுரங்களை வியாபார நோக்கத்திற்காக,அரசியல் நோக்கத்திற்காக,வேறு சமூக தேவைக்காக விநியோகிக்கவும் நிற்கும் காட்சி.

உண்மையில் வறுமையின் காரணமாக தர்மம் கேட்போர் கூட பள்ளிவாசல் முன் நிற்பது தவிர்க்கப்பட வேண்டும் எனினும் மனிதாபிமான நோக்கில் அனுமதிக்கப் பட்டாலும், 

இரண்டாவது பிரிவினர் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதை தவிர்க்க வேண்டும்,அல்லது தடுக்க வேண்டும்.

ஜும்மா என்பது வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமைகளில் நேரம் குறித்தொதுக்கப்பட்ட ஒரு கட்டாயக் கடமை.

ஒவ்வொரு ஊரிலும் உள்ள முஸ்லிம் ஆண்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ளும் ஒரு கடமையான தொழுகை மட்டுமல்ல ஜும்மாவின் உரை என்பது பிரசங்கமாக அல்லாமல் சமூகத்தை வழி நடத்தும் பிரகடனமாக இருக்க வேண்டும். 

ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக போஸ்டர் ஒட்டி,பிரசுரம் விநியோகித்து,தொலைக்காட்சி,வானொலி போன்றவற்றை பயன்படுத்தியும் ஒன்று சேர்க்க முடியாத ஒரு ஊரின் முழு ஆண்களையும் அல்லாஹ்வின் கட்டளையும்,நபிகளாரின் வழிமுறையும் ஒன்று கூட்டும்  ஒரு தளம்தான் ஜும்மா என்பது.

அத்தகைய ஜும்மாவின் மிம்பர் மேடைகள்,இன்று முஸ்லிம் சமூகத்தை நெறிப்படுத்தும்,வழிகாட்டும் பிரகடனங்கள் கூறப்பட வேண்டிய தளமாக அல்லாமல் மிம்பர் ஆசனங்கள் இன்று வேறு நாட்களில் தொழுகைகளின் பின் கூறப்படும் பிரசங்கங்கள், பயான்கள் போன்று பயன்படுத்தப்படுகின்றன. 

ஜும்மா நேரத்தில் உழைப்பது,தேடுவது ஹராம் கண்டிப்பாக தடுக்கப்பட்டது என்று எச்சரிக்கும் மார்க்கம்,ஜும்மா முடிந்தவுடன் உங்களுக்காக அருளியவற்றை தேடி விரையுங்கள் என்றும் உபதேசம் புரிகின்றது.

இந்த நேரங்களில் மக்கள் விரைந்து செயற்படுவதை தடுக்க,தாமதப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.

குறிப்பிட்ட நேரத்தில் உழைத்தல்,தேடல் ஹராம் என்று தடுக்கும் மார்க்க கட்டளை,அந்நேரக் கடமையை நிறைவேற்றிய உடன் உழைப்பதற்காக,தேடலுக்காக விரைந்து செல் என்று அறிவுறுத்துகின்றது,

பள்ளிவாசல் என்பதும்,அதன் சுற்று வட்டாரமும் புனிதம் பாதுகாக்கப்பட வேண்டியவை,அமைதி பேனப்பட வேண்டிய இடங்கள்.

எனவே சகோதரர்களே,சமூகத்தை வழிநடத்த,சமூகத்தை அரசியல் வழிப்படுத்த முன்வரும் சமூக செயற்பாட்டாளர்களே,அரசியல்வாதிகளே பள்ளிவாசல்களின் புனிதம் பேனுங்கள்,ஜும்மாவின் நாளை கண்ணியப்படுத்துங்கள்..!

2 comments:

  1. தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டது முதல் அது நிறைவேற்றப்படும் வரை, இவ்வித செயல்பாடுகள் பள்ளிச் சூழலில் அனுமதிக்கப்படாது இருப்பதே மேல்.

    ReplyDelete
  2. Ateek Abu u need to consult a doctor.
    You are infected with Saudiphobia.

    ReplyDelete

Powered by Blogger.