December 25, 2017

NFGG யின் வேட்பாளர், ஒழுக்கக் கோவை


மக்களுக்கு விசுவாசமான அரசியல் சக்தியைக் கட்டியெழுப்புவதை முதன்மையாகக் கொண்டு கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அர்ப்பணிப்புடன் செயலாற்றிவரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் போட்டியிடுகின்ற தனது வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கின்ற நிகழ்வை காத்தான்குடியில் நடாத்தியது.

நாடு முழுவதும் 20 உள்ளுராட்சி சபைகளுக்காகப் போட்டியிடுகின்ற வேட்பாளர்களும், கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கலந்துகொண்ட இன்றைய நிகழ்வில் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒவ்வொரு வேட்பாளரும் தமக்கு வழங்கப்பட்ட ஒழுக்கக் கோவையில் கையொப்பமிட்டு சத்தியப் பிரமானம் செய்து கொண்டனர்.

வேட்பாளர்களுக்கான ஒழுக்கக் கோவை

1. வேட்பாளர்கள் தேர்தல்களின் போது தமது வெற்றிக்காக மாத்திரம் அன்றி கட்சியின் வெற்றிக்காக உழைப்பவராக இருத்தல் வேண்டும்.

2. தனது வட்டாரத்தில் அல்லது தொகுதியில் உள்ள கட்சியின் ஏனைய அங்கத்தவர்கள், ஆதரவாளர்களுடன் இணைந்தே செயற்படவேண்டும்.

3. தேர்தலின்போது சொந்த விடயங்களை முத‌ன்மைப்படுத்தாது, கட்சியின் வழிகாட்டல்களுக்கு அமைய கட்சியின் கொள்கைகள், விழுமியங்கள், அரசியல் கலாசாரம் என்பவற்றை முற்படுத்தி‌யே பிரசாரம் செய்ய வேண்டும்.

4. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொய் கூறுதல், மற்றவர்கள் மீது அவதுாறுகள் கூறுதல், பிழையான தகவல்களைப் பரப்புதல் போன்றவற்றிலிருந்து தவிர்ந்து நடத்தல் வேண்டும்.

5. பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்காது இருத்தல் வேண்டும்.

6. சூழ்ச்சி, தேர்தல் மோசடி போன்ற குறுக்கு வழிகளில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருத்தல்.

7. கட்சியின் ஒழுங்கு விதிகளையும், அடிப்படைப் பெறுமானங்களையும் பின்பற்றியே தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

8. வெற்றியையும், தோல்வியையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் இருத்தல் வேண்டும்.

9. மக்களைத் தொந்தரவு  செய்யும் விதத்திலும், அவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதத்திலும் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இருத்தல் வேண்டும்.

10. தேர்தல் விதிமுறைகளையும், பொதுவான நாட்டின் சட்டங்களையும் மதித்து நடக்க வேண்டும்.

11. தேர்தல் செலவுகளை சிக்கனமாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் மேற்கொள்ளல். குறைந்த செலவில் கூடிய விளைவை பெற முயற்சித்தல் வேண்டும்.

12. எல்லா சந்தர்ப்பங்களிலும். கட்சியினதும், தலைமைத்துவ சபையினதும் வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் பெற்றே செயற்படவேண்டும்.

13. வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புக் கூறும் மனப்பாங்குடனும் செயற்படவேண்டும்.

14. மக்கள் மத்தியில் கட்சியின் பிரதிநிதியாகவும், முகவராகவும் தான் செயற்படுகின்றேன் என்ற பிரக்ஞையுடன் நடந்து கொள்ளல் வேண்டும்.

பட்டம் பதவிகளுக்காக தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் மத்தியில், தனது வேட்பாளர்கள் ஒற்றுமையாகவும், மக்களின் நலனை முன்னிறுத்தி தேர்தல்களில் போட்டியிடவேண்டும் எனவும், அதனுாடாக கிடைக்கப்பெறுகின்ற பதவி எனும் அமானிதத்தை எந்த வகையிலும் துஷ்பிரயோகம் செய்யாது மக்களின் நலனுக்காக மாத்திரம் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்தி ஒவ்வொரு வேட்பாளருடனும் உடன்படிக்கை கைச்சாத்திட்டு முற்போக்கான மக்கள் சக்தியாக திகழ்கின்றது.

மாற்றத்திற்காய் அணிதிரள்வோம்!
நல்லாட்சியை உருவாக்குவோம்!!
மக்கள் மனம் திறக்கட்டும்!!!
வெற்றிக் கொடி பறக்கட்டும்!!!!

3 கருத்துரைகள்:

Ippadi than oru throhi wada mahana sabaiku ponaar...😀😀😀

உண்மையான முஸ்லிம்மாக இருந்தாலே போதும்.... எல்லாம் சரியாகிவிடும். இது ஒரு அரசியல் விளம்பரமாகவே பார்க்கிறோம். மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம். ரஹ்மானை - Peradeniya University ( தலைவர் அஷ்ரப் அவர்களை விமர்சனம் செய்து புத்தகம் ஓன்று வெளியிடப்பட்டது - சாதிக் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ) இல் இருந்து லண்டன் சென்று தொழில் செய்ததில் இருந்து தற்போது வரை..... அரசியல் நெருக்கடி நேரம் சொந்தக்கருத்தை கூறி அதட்கான முன்னெடுப்புக்களை செய்வதை விடுத்து, அதிகாரத்தில் உள்ள முஸ்லீம் தலைவர்களையும் அரசியல் வாதிகளையும் குறைகூறுவதில் அதிக கவனம் செலுத்துவதாகவே அவதானிக்கொண்டிருக்கிறோம்.

உண்மையான முஸ்லிம்மாக இருந்தாலே போதும்.... எல்லாம் சரியாகிவிடும். இது ஒரு அரசியல் விளம்பரமாகவே பார்க்கிறோம். மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம். ரஹ்மானை - Peradeniya University ( தலைவர் அஷ்ரப் அவர்களை விமர்சனம் செய்து புத்தகம் ஓன்று வெளியிடப்பட்டது - சாதிக் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ) இல் இருந்து லண்டன் சென்று தொழில் செய்ததில் இருந்து தற்போது வரை..... அரசியல் நெருக்கடி நேரம் சொந்தக்கருத்தை கூறி அதட்கான முன்னெடுப்புக்களை செய்வதை விடுத்து, அதிகாரத்தில் உள்ள முஸ்லீம் தலைவர்களையும் அரசியல் வாதிகளையும் குறைகூறுவதில் அதிக கவனம் செலுத்துவதாகவே அவதானிக்கொண்டிருக்கிறோம்.

Post a Comment