Header Ads



டிரம்புக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு, கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ரத்து


ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயேசு கிறிஸ்து வாழ்ந்த இடமாக கருதப்படும் நாசரேத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலஸ்தனத்தில் உள்ள ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இருநாடுகளுமே அந்த நகரை தங்கள் நாட்டின் தலைநகரம் என்று அறிவித்துள்ளன. ஆனால், அதை பெரும்பாலான நாடுகள் ஏற்கவில்லை.

இந்த நிலையில் ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் என்பதை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதுடன் அரபு நாடுகளில் பதட்டத்தையும் உருவாக்கி உள்ளது.

இந்நிலையில், டிரம்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிறிஸ்துவர்களின் மிக முக்கிய புனிதத்தலமான இயேசு கிறிஸ்து வாழ்ந்த இடமாக கருதப்படும் நாசரேத்தில் இந்த ஆண்டிற்கான ஒருசில கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து நாசரேத் நகர செய்தித்தொடர்பாளர் சலிம் ஷரரா கூறுகையில், ‘டிரம்ப் ஜெருசலேமைப் பற்றி கூறிய கருத்தினால் நாம் இப்போது சர்ச்சையான சூழ்நிலையில் இருக்கிறோம், எனவே பாரம்பரியமாக கிறிஸ்துமஸ் தினத்தன்று  நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்’, என அவர் கூறினார்.

ஆண்டுதோறும் நடைபெறும் சந்தை கடைகள் மற்றும் கிறிஸ்துமஸ் ஆலய வழிபாடு ஆகிய வழக்கம் போல நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் பெத்லகேம் மற்றும் ரமல்லா நகரில் உள்ள பேராலயங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டன.

1 comment:

  1. Jesus was never born in December 25th, that day was birthday of roman's Sun God. St. Paul + Constantine the great + Satan misguided the Jesus's true religion Islam(refer barnabas bible + dead sea scrolls + al Quran)

    ReplyDelete

Powered by Blogger.