Header Ads



அடிப்படைவாதிகளால் தற்போது, மத்தியகிழக்கு அழிகிறது - ராஜித

அடிப்படைவாதிகளுடன் இடைநடுவில் உடன்படிக்கைகளுக்கு செல்லாமல் நல்லாட்சியை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அளுத்கமை தர்கா நகர் சாஹிரா கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பேருவளையில் இருக்கும் போதே எமது வாழ்க்கையில் சகவாழ்வு ஏற்பட்டது. இதன் பின்னர் கொழும்பு ஆனந்த கல்லூரியில் கல்வி கற்ற போது முஸ்லிம் பிள்ளைகளுடன் இணைந்து கல்வி கற்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

1956 ஆம் ஆண்டு வரை நாட்டில் இனங்களுக்காக தனித்தனியாக பாடசாலை இருக்கவில்லை. இதனால், தேசிய சகவாழ்வு இருந்தது.பிற்காலத்தில் சரியான கல்வி கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு இனங்களுக்கான பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.

இதன் காரணமாவே சகவாழ்வு குறைந்து போனது. நாம் அனைவரும் மனிதர்கள். எனினும் இன, மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து மனிதர்களை புறந்தள்ளுகின்றனர். மத ரீதியான அடிப்படைவாதிகளை உருவாக்கின்றனர்.

இதனால்,நாடு அழியும். இந்த அடிப்படைவாதத்தில் இருந்து இலங்கை மீட்க வேண்டும். ஜனவரி 8 உறுதிமொழி அதுதான்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டனர். சிறுபான்மையினர் தம்மிடம் வந்து உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்றைய ஆட்சியாளர்கள் நினைத்தனர்.

இந்தியாவின் அசோக சக்கரவர்த்தி மற்றும் தென் ஆபிரிக்காவின் நெல்சன் மண்டேலா உதாரணமாக கொண்ட இது குறித்து நான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தெளிவுப்படுத்தினேன்.முன்னாள் ஜனாதிபதியை ஆசியாவின் நெல்சன் மண்டேலாவாக மாற்றும் தேவை எனக்கிருந்தது.

எனினும் அவர் ரொபர்ட் முகாபே பாத்திரத்தை தெரிவுசெய்தார். நெல்சன் மண்டேலா உலகில் தோன்றிய யுக புருஷர். ஆனால் ரொபர்ட் முகாபே பொருளாதாரத்தை கொள்ளையடித்து மக்களின் எதிர்பார்ப்புகளை சிதைத்தார். முகாபேவை பதவியில் இருந்து தூக்கி எறிந்து இராணுவ அதிகாரத்தை கைப்பற்றியது.

நாட்டின் புகழ்பெற்ற மனிதரின் இறுதி பயணம் இப்படியானது. புகழ்மிக்க பயணத்தை மேற்கொள்ள சகவாழ்வு மிகவும் அவசியமானது.

அடிப்படைவாதங்களால் நாடுகள் அபிவிருத்தியடைவதில்லை. வேற்று மதங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இலங்கையர் என்ற தேசியத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

அடிப்படைவாதிகளால் தற்போது மத்திய கிழக்கு அழிந்து வருகிறது. அடிப்படைவாதிகளின் கருத்துக்கள் பொய்யானவை என்பது அறிவியல் ரீதியாக ஒப்புவிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. மஹிந்த இரண்ஆடாம்ட்சி இடத்யிதுக்ல்கு தள்ளப்பட்ட முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்தால் ஏழாம் இடத்திற்கு தள்ளி வைத்துள்ளீர்கள்

    ReplyDelete

Powered by Blogger.