Header Ads



வாழ்த்துக்களும், சில ஆலோசனைகளும்

க.பொ.த.உ. தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியிருக்கும் இத்தருணத்தில் இப்பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்று குடும்பம், ஊர் மற்றும் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எமது உளம் கனிந்த பாரட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேநேரம் இப்பரீட்சையில் போதிய பெறுபேறுகளைப் பெறாத அனைத்து மாணவ மாணவிகளும் இது குறித்து கவலைப்படாது அடுத்தகட்ட நகர்வுக்கான பாதையை சிந்திப்பதே மிகச் சிறந்ததாகும் ஏனெனில் பல்கலைக்கழகம் சென்றவர்கள் மாத்திரம் அறிவாளிகள் ஏனையோர் அறிவு குறைந்தவர்கள் எனும் மாயை ஒரு சிலரால் மக்கள் மன்றத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றது, இது முற்றிலும் தவறாகும். சில பல்கலைக்கழகங்களது பாட நூற்கள் கூட அவற்றில் நுழையாத அறிஞர்கள் தொகுத்தவை என்பதும் இங்கு குறித்துக் காட்டப்பட வேண்டிய அம்சமாகும்.

உலகில் அன்று தொடக்கம் இன்று வரை சாதனை புரிந்தோரில் பெரும்பாலானோர் பல்கலைக்கழகம் சென்று கல்வி கற்காத அறிஞர்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்வது உத்தமமாகும், அத்தோடு போதிய பெறுபேறுகளைப் பெறாத மாண மாணவிகளை கீழ்த்தரமாகப் பார்ப்பதும், “நீங்கள் திறமையற்றவர்கள், ஒன்றுக்கும் தகுதியற்றவர்கள்” எனும் வார்த்தைகளால் அவர்களை துன்புறுத்தி அடக்கி ஒன்றுக்கும் இயழாதவர்கள் என்று சித்தரித்து உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்குவதிலிருந்தும் ஒவ்வொரு ஆசியரும், பெற்றோரும், சக நண்பர்களும் தவிர்ந்திருப்பது மிகக் கட்டாயமாகும்.

மேற்குறித்த மாணவ மாணவிகள் அரச பல்கலைக்கழகத்திற்கு நுழைய முடியாததையிட்டு, மனம் நோகாது சோர்ந்து போகாது அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்து உரிய முன்னெடுப்புகளை மேற்கொள்வது புத்திசாலித்தனமாகும். அத்தோடு அதற்கு மாற்றீடாக திறந்த பல்கலைக்கழகம், மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இணைந்து பொருத்தமான கற்கைகளைத் தெரிவு செய்து கற்பதனூடாக முன்னேற்றப்பாதையில் நிச்சயம் வீறு நடை போடலாம்.

மேலும் மேற்குறித்த மாணவ மாணவிகள் தமது திறமைகள் மற்றும் தகைமைகளை வளர்த்துக் கொள்வதற்கும், ஆளுமை விருத்திகளை மேற்கொள்வதற்கும் பல ஆக்கபூர்வமான கற்கைகள் இன்று உலகளவில் காணப்படுவதால் அவற்றில் தகுதியானவற்றை தெரிவு செய்து உங்களை ஈடுபடுத்துவதனாலும் உங்களை நீங்கள் கல்விச் சிகரத்தில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

ஆக பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்றுள்ள மாணவ மாணவிகளை வாழ்த்துவதோடு குறைந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ மாணவிகளை அடுத்த கட்ட நகர்வுக்காக தயார்படுத்தி ஊக்குவித்து ஆதரவளிப்போம்.

“இலகுபடுத்துங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள், நன்மாராயம் கூறுங்கள், வெறுப்படைய வைக்காதீர்கள்”

அ(z)ஸ்ஹான் ஹனீபா

5 comments:

  1. Excellent....
    Kind Advises and Information for Teachers & Parents even Students....

    ReplyDelete
  2. Dear Mr. Azhan Haniffa, you deserve a big round of applause �� ����
    Hats off to you!

    ReplyDelete
  3. Dear Brother Alhamdulillah Good advice for all O/L students.

    ReplyDelete
  4. Yes good & Needful advices...

    ReplyDelete
  5. Barakallah..may Allah reward you for this advice.

    ReplyDelete

Powered by Blogger.