Header Ads



அம்பாறையிலும் கண்டியிலும் தனித்தே போட்டி - ரிஷாட்


உள்ளூரட்சித்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடளாவிய சபைகளில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று மாலை இடம்பெற்றது.

நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் கிளை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

தனித்துப் போட்டியிடுவதால் ஏற்படும் சாதகப் பாதகங்கள் மற்றும் இணைந்துப் போட்டியிடுவதால் ஏற்படும் சாதகப் பாதகங்கள் தொடர்பில் அந்தந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கருத்து வெளியிட்டனர்.

அம்பாறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது மற்றும் ஆசனப் பகிர்வு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்ச்சியான பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் கட்சியின் ஆசனப் பகிர்வில் திருப்தி ஏற்படாத பட்சத்தில் அந்த இடங்களில் தனித்துப் போட்டியிடுவது பற்றி முடிவெடுக்கப்படுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அறிவித்தார்.
கண்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமென இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களான ஹஸனலி, பசீர் சேகுதாவூத், அன்சில், தாஹிர் மற்றும் நசார் ஹாஜியார் ஆகியோரின் ஜனநாயக ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் நாட்களில் உறுதியான முடிவை கட்சித்தலைமை அறிவிக்குமென தவிசாளர் அமீர் அலி கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கண்டி, கொழும்பு, திருகோணமலை, சம்மாந்துறை, மட்டக்களப்பைச் சேர்ந்த உள்ளூராட்சி சபைகளின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இந்தக் கூட்டத்தில் செயலாளர்நாயகம் சுபைர்தீன், தவிசாளர், அமீர் அலி, எம்பிக்களான நவவி, இஷாக், மஹ்ரூப் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான பாயிஸ், அலிகான் ஷரீப் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

7 comments:

  1. All Muslim parties are fooling the Muslim Community.

    ReplyDelete
  2. If u give any position to Hassan Ali n segudawood they will sell entire ....

    ReplyDelete
  3. றிசாத் என்னப்பா அரசியல் சீர்திருத்த சட்ட மூலத்துக்கு வாக்களித்து விட்டு ஹக்கீம் ஆதரவளித்ததால் தன்னால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது ஆதரவளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிப்போயிட்டது என்று கூறினீர்கள். இப்போது கூட்டணி அமைப்பது பற்றி சிந்திக்கிறீர்கள். இதற்கும் ஹக்கீமின் திருவிளையாடலை அவதானித்து தான் உங்கள் தீர்மானம் செல்லும் என்பது உங்கள் அரசியல் பொது விதி. பொறுத்திருந்து பாப்போம். பாவம் அப்பாவி முஸ்லிம்கள்.

    ReplyDelete
  4. அல்ஹம்து லில்லாஹி ஒரு மாதிரியா முஸ்லிம்காங்கிரஸ்ஸை இல்லாது ஆக்க செயல்பட்டு அதன் இருதிகட்டத்தை அடைந்துவிட்டோமென்று சந்தோஷ மூச்சு அனலாய் பரக்கின்றது,சரி இன்னும் இலங்கை முஸ்லிம்களின் முதுகின்மீது எத்தனை கட்சிகள்?

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீன்

    ReplyDelete
  6. சொந்த தொகுதியில் தனித்து போட்டியிட தைரியமுண்டா?

    ReplyDelete

Powered by Blogger.