Header Ads



ஹத்துருசிங்கவால் தூக்கப்பட்ட, பங்களாதேஷ் வீரரின் சாடல்


இலங்கை அணியின் புதிய பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்கவினால் இலங்கை அணிக்கு மேலதிகமாக எந்தவித வாய்ப்பும் கிடைக்கப்போவதில்லையென பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் சௌமியா சர்கார் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக கடந்த பல வருடங்களாக பணியாற்றி அதிலிருந்து விலகி தற்போது தனது சொந்த நாட்டு அணியான இலங்கை அணியின் பயிற்சியாளராக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பங்களாதேஷ் வீரர் சௌமியா சர்கார் இவ்வாறு கூறியுள்ளார்.

பங்களாதேஷில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரானதும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரானதுமான தொடர்களில் மிக முக்கிய பங்கை வகித்து பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சௌமியா சர்கார். எனினும் அண்மைக் காலமாக இவரது ஆட்டத் திறன் குன்றியிருந்ததால் இவரை அணியிலிருந்து ஹத்துருசிங்க விலக்கியிருந்தார். 

இந்த நிலையில் ஹத்துருசிங்க இலங்கை அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது தொடர்பாக கருத்துக் கூறுகையில்;  புதிய வருடத்தில் இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். எங்களுக்கும் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளார். இரு அணிகளினதும் ஆட்டத் திட்டங்கள் இனி மாறுபட்டிருக்கும். தற்போதைய நிலையில் இலங்கை அணி ஆட்டத் திறன் குன்றிக் காணப்படுகின்றது. 

எனினும் புதிய பயிற்சியாளரான ஹத்துருசிங்கவால் இலங்கை அணிக்கு மேலதிகமாக எதனையும் வழங்கிவிட முடியாது. அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கை அணி பங்களாதேஷ் வருகிறது. 

ஹத்துருசிங்க இலஙகை அணிக்கு எவ்வாறான பயிற்சிகளை வழங்குவார் என்பது எமக்குத் தெரியும். அவரது திட்டம் எவ்வாறானாது என்பதும் எமக்குத் தெரியும். இதனால் அவரது திட்டத்திற்கு எதிராக எங்களால் திட்டமிடலை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.