Header Ads



இலங்கையில் வறிய நிலையில் உள்ளவர்கள் குற்றவாளிகளா? மாற்று நடவடிக்கை அவசியப்படுகிறது

இலங்கையில் வறிய நிலைமையில் உள்ளவர்கள் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின், பலவந்தமான தடுத்து வைத்தலுக்கு எதிரான குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்கள், சட்ட செயற்பாடுகளான சட்டத்தரணிகளுக்கான கட்டணம் செலுத்துதல் போன்ற இயலுமையைக் கொண்டவர்கள், குற்றங்களில் இருந்து விடுதலைப் பெறுகின்றனர்.

ஆனால் இதற்கான இயலுமை இல்லாத வறிய நிலையில் உள்ளவர்கள், குற்றவாளிகளாக தடுத்து வைக்கப்படுகின்றனர்.

இதற்கு மாற்று நடவடிக்கை ஒன்று அவசியப்படுகிறது என்று அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.