Header Ads



ஜெரூசலம் குறித்து இன்று அவசரக் கூட்டம், அமெரிக்கா ஒவ்வொரு நாட்டுக்கும் எச்சரிக்கை, டிரம்பும் மிரட்டல்

ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முடிவு குறித்து ஐ.நா பொதுச் சபை இன்று அவசரமாக கூடவுள்ளது. அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் கோரிக்கையை அடுத்து 193 அங்கத்துவ நாடுகளை கொண்ட பொதுச் சபை தனது அரிதான அவசர கூட்டத்தை நடத்துகிறது.

எனினும் இந்த கூட்டத்தில் தமக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் நாடுகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என்று அமெரிக்கா ஒவ்வொரு நாட்டையும் எச்சரித்துள்ளது.

டிரம்பின் பிரகடனத்தை வாபஸ் பெறக் கோரும் தீர்மானம் ஒன்றின் மீது பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானதோரு தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு சபையில் கடந்த திங்கட்கிழமை கொண்டுவரப்பட்டபோது அமெரிக்கா அதன் வீட்டோ அதிகாரத்தை கொண்டு அந்த தீர்மானத்தை நிராகரித்தது.

எனினும் எகிப்து கொண்டு வந்த அந்த திர்மானத்திற்கு பாதுகாப்பு சபையில் ஏனைய 14 அங்கத்துவ நாடுகளும் ஆதரவாக வாக்களித்திருந்தன. அந்த தீர்மானத்தில் அமெரிக்கா மற்றும் டிரம்பின் பெயர்கள் குறிப்பிட்டு கூறப்படாதபோதும் அமெரிக்காவின் அண்மைய முடிவு ஜெரூசலத்தின் அந்தஸ்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கடும் கவலை வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் இந்த தீர்மானதிற்கு பாதுகாப்பு சபையில் அதிக பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என்று மன்சூர் திங்களன்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். பொதுச் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை கடைப்பிடிக்கவேண்டிய கடப்பாடு இல்லாதபோதும் அது அரசியல் ரீதியில் தாக்கம் செலுத்துவதாக இருக்கும்.

ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலி பல டஜன் ஐ.நா அங்கத்துவ நாடுகளுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், அமெரிக்காவின் முடிவை விமர்சிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளை அமெரிக்கா ஞாபகத்தில் வைத்திருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

“ஜனாதிபதி (டிரம்ப்) இந்த வாக்கெடுப்பை உன்னிப்பாக அவதானித்து வருகிறார். எமக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகள் பற்றிய அறிக்கையை தம்மிடம் சமர்ப்பிக்கும்படியும் அவர் கோரியுள்ளார். இந்த விடயத்தில் விழும் ஒவ்வொரு வாக்கையும் நாம் பதிவுசெய்துகொள்வோம்” என்று ஹேலி எழுதிய கடிதத்தில் ஒவ்வொரு நாடும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் எதிரொலியாக அவர் தனது ட்விட்டரில், “அமெரிக்கா பெயர்களை பதுவுசெய்து கொள்ளும்” என்று பதிவிட்டுள்ளார்.

1950 தீர்மானத்தின் கீழ், பாதுகாப்புச் சபை செயற்பட தவறும் நிலையில் கூட்டு நடவடிக்கை ஒன்றுக்காக உறுப்பு நாடுகள் பொருத்தமான பரிந்துரை ஒன்றை விடுத்தால் அந்த விடயம் தொடர்பில் பொதுச் சபையின் அவசர சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதுவரை 10 தடவைகள் மாத்திரமே பொதுச் சபை அவசர கூட்டத்தை நடத்தியுள்ளது. கடைசியாக இவ்வாறான ஒரு விடயம் தொடர்பில் 2009 ஆம் ஆண்டு பொதுச் சபை அவசரமாக கூடியது. அப்போது ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலம் மற்றும் பலஸ்தீன நிலங்கள் பற்றி ஆராயப்பட்டது. அந்த அமர்வை மீண்டும் ஆரம்பித்து வைப்பதாகவே வியாழக்கிழமை கூட்டம் அமையவுள்ளது.

அமெரிக்காவின் பல தசாப்த கொள்கையை மாற்றிக்கொண்டே டிரம்ப் இம்மாதம் ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக பிரகடனம் செய்தார். இது பலஸ்தீனர் மற்றும் அரபு உலகில் கோபத்தை தூண்டியதோடு அமெரிக்காவின் மேற்குலக நட்பு நாடுகளும் இந்த முடிவை எதிர்த்தன.

டெல் அவிவில் உள்ள இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்திற்கு மாற்றும் திட்டத்தையும் டிரம்ப் அறிவித்தார். ஜெரூசலத்தில் தூதரகம் அமைப்பதில் இருந்து அனைத்து நாடுகளும் விலகிக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா நகல் தீர்மானம் வலியுறுத்துகிறது. எனினும் திங்கட்கிழமை அந்த தீர்மானத்தின் மீது வீட்டோ அதிகாரத்தை பிரயோகித்த ஹேலி, அமெரிக்காவின் இறைமை மற்றும் மத்திய கிழக்கு அமைதி செயற்பாட்டில் அமெரிக்காவின் பங்கை பாதுகாப்பதற்காக இதனை செய்ததாக நியாயம் கூறியிருந்தார். இந்த தீர்மானம் அமெரிக்காவை அவமதிப்பதாகவும் சபை உறுப்பினர்களுக்கு அவமானத்திற்கு உரியது என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

ஜெரூசலம் தமது ஒருமித்த மற்றும் ஒரே தலைநகர் என்று இஸ்ரேல் கருதுகிறது. எனினும் இந்த நகரின் கிழக்கு பகுதி தமது எதிர்கால சுதந்திர பலஸ்தீன நாடொன்றின் தலைநகர் என்று பலஸ்தீனம் எதிர்பார்க்கிறது. கிழக்கு ஜெரூசலத்தை 1967 ஆம் ஆண்டு யுத்தத்தில் ஜோர்தானிடம் இருந்து ஆக்கிரமித்த இஸ்ரேல் அதனை தனது ஆட்புலத்திற்குள் இணைத்தபோதும் சர்வதேசம் ஏற்கவில்லை.

5 comments:

  1. US to the WORLD is No Different to the DUGS and GANGS in countries..

    Threatening the DEMOCRACY/ FREEDOM of voting ? for which UN is created..

    ReplyDelete
  2. Intimidating n blackmailing arms twisting? Last resort to Trumps ftustration, barking n yelling ! Psycopath clown beating his breast!

    ReplyDelete
  3. Mr. Ajan Antony Raj, it's seems you are Christian, Without knowing fact don't comments here like a fool,Kindly world Non-muslims should understand that We are obeying only for Almighty ALLAH & Our prophet Muhammad (Sallallahu Alaihi wasallam),
    We have learnt from them peace not violence,

    ReplyDelete
  4. கோழைகளும் வீரர்களும் தம்மைத் தாமே சுய பிரகடனம் செய்யும் நாள் இது!

    ReplyDelete

Powered by Blogger.