Header Ads



சவூதி பணிப்பெண்களுக்கு, சம்பள அட்டை அறிமுகம்


வீட்டுப் பணிப்பெண்கள், ஓட்டுநர்கள் உட்பட வீட்டுத் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக சவூதி அரேபியாவில் சம்பள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனுசரணையாளர்கள் தமது வீட்டுப் பணியாளர்களுக்கு இந்த சம்பள அட்டையை விநியோகிக்க சவூதி தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு ஆறு மாத கெடு விதித்துள்ளது. இதன்படி வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் சவூதியை வந்தடைந்த விரைவிலேயே அனுசரணையாளர்கள் இந்த சம்பள அட்டையை விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பள அட்டையை வழங்குவதற்கு ஏற்கனவே பல வங்கிகளும் முன்வந்துள்ளன. சவூதி அரேபியாவுக்குள் மாத்திரம் இந்த அட்டை அனுமதிக்கப்படுவதோடு அனுசரணையாளர்களுக்கு மாத்திரமே இதில் வைப்புச் செய்ய முடியும்.

இதன்மூலம் வீட்டுப் பணியாளர்களுக்கு நேரத்திற்கு சம்பளம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என்பதோடு அவர்களின் சம்பளம் பாதுகாக்கப்படும் என்று சவூதி தொழிலாளர் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சவூதி அரேபியாவில் இலங்கையின் 200,000க்கும் அதிகமான வீட்டுப் பணியாளர்கள் இருப்பதோடு இவர்களில் பாதி அளவானோர் வீட்டுப் பணிப்பெண்களாவர். 

No comments

Powered by Blogger.