Header Ads



ஜெருசலேம் விவகாரம்: டிரம்ப்புக்கு பிரான்ஸ் எச்சரிக்கை

-BBC-

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அமெரிக்கா ஒருதலைபட்சமாக அறிவிக்கக்கூடும் என்பது குறித்து தான்கவலை கொண்டுள்ளதாக, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், அதிபர் டிரம்பிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எந்த முடிவாக இருந்தாலும், `இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தின் பேச்சுவார்த்தையின் வரையறைக்குள்ளேயே இருக்க வேண்டும்` என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பாக, பல அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளும் இதே எச்சரிக்கையை அளித்துள்ளன.

இந்த வாரம், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கலாம் என அறிக்கைகள் கூறுகின்றன.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய இரு நாடுகளும், ஜெருசலத்தை தங்களின் தலைநகரம் என்று உரிமை கோருகின்றன.

அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெருசலத்திற்கு மாற்றுவதற்கு இருந்துவரும் ஆணைக்கு தடைவிதிக்கும் வகையில், அதிபர் டிரம்ப் கையெழுத்திடும் கோப்பில், இந்தமுறை அவர் கையெழுத்திட தவறலாம் என வெள்ளை மாளிகை தெரிவித்தது.

ஆனால், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஹோகன் கிட்லி, `இந்த விவகாரத்தில் அதிபர் மிகவும் தெளிவாக உள்ளார். இது நடந்துவிட்டால் என்ற விஷயமல்ல, எப்போது நடக்கவுள்ளது என்பதே விஷயம்` என கூறியுள்ளார்.

1995இல், அமெரிக்க நாடாளுமன்றம் தூதரகத்தை மாற்றியமைக்கவேண்டும் என சட்டம் கொண்டுவந்தது முதல், ஒவ்வொரு அமெரிக்க அதிபரும், அதை தள்ளுபடி செய்யும் வகையில் ஆறு மாத்த்திற்கு ஒருமுறை, தள்ளுபடி பத்திரத்தில் கையெழுத்திடுவார்கள்.

2 comments:

  1. The world police dog.. will fall into trouble soon.

    ReplyDelete
  2. Called WAHN HUBBUD DUNYA
    KULLU HATHIYYA .

    ReplyDelete

Powered by Blogger.