December 10, 2017

93 உள்ளூராட்சி சபைகளுக்கு, நாளை தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல்

93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகவுள்ளது. முதல் கட்டமாக வேட்புமனுக்கள் கோரப்பட்ட சாவகச்சேரி நகரசபை உள்ளிட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமாகிறது.

இங்கு எதிர்வரும்  14ஆம் நாள் நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர், தேர்தல் நடைபெறும் நாள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியிடப்படும்.

வேட்புமனுத் தாக்கல் இடம்பெறும் காலகட்டத்தில் மாவட்டச் செயலகங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு, தேர்தல்கள் ஆணையம், சிறிலங்கா காவல்துறையிடம் கோரியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment