Header Ads



முஸ்லிம் சிறுமிகளுக்காக, 6 சட்டத்தரணிகள் இலவசமாக ஆஜர் - ஜனவரிக்கு வழக்கு ஒத்திவைப்பு

கொழும்பில் முஸ்லிம் சிறுமிகள் தங்க வைக்கப்பட்ட இடமொன்றில் 18 முஸ்லிம் அநாதைச் சிறுமிகள் பாலிய் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு இன்று (07) வியாழக்கிழமை நுகேகொடை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சிறுமிகள் சார்பில் மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையில் 6 சட்டத்தரணிகள் ஆஜராகியுள்ளனர்.

இவர்களில் 2 சிங்கள சட்டத்தரணிகளும் அடங்குவர். அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் இந்த வழக்கில் இலவசமாகவே ஆஜராகினர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் பற்றிய விசாரணை தொடர்வதாக இதன்போது பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

எனினும் பொலிஸார் விசாரணையை தாமதப்படுத்துவதாக சட்டத்தரணிகள் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இந்தநிலையில் விசாரணை துரிதப்படுத்த உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். www.jaffnamuslim.com

1 comment:

  1. இதை செய்த நாய்களின் தலையை வெட்டியெறிய ஒருவர்கூடவா இல்லை?

    ReplyDelete

Powered by Blogger.