Header Ads



அரசியல் முக்கியஸ்தரின் மகன் வாங்கிய ஆடம்பர கார், துறைமுகத்தில் காத்திருக்கிறது - 580 இலட்சம் ரூபா வரி செலுத்த வேண்டும்

பல கோடி ரூபா பெறுமதியான லெம்போகினி ரக நவீன மோட்டார் வாகனம் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதான அரசியல் முக்கியஸ்தர் ஒருவரின் மகனினால் இந்த கார் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் உரிமையாரின் மனைவியின் பெயரில் லெம்போகினி ரக வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்திற்கு தீர்வை வரி செலுத்தி விட்டு வாகனத்தை கொண்டு செல்வதற்காக உரிமையாரின் மனைவி சென்ற போது, அவரிடம் சில கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

எனது பெயரில் கொண்டு வரப்பட்ட இந்த வாகனத்திற்கு அரசியல்வாதி ஒருவரின் மகனே உரிமையாளர் என உரிமையாரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

வாகனத்திற்கான அனைத்து ஆவணங்களும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5000 CC திறன் கொண்ட எஞ்சின்கள் இந்த வாகனத்திற்கு பொருத்தப்பட்டுள்ள நிலையில் மணிக்கு 350 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனம் பயணிக்கும் என கூறப்படுகின்றது.

என்ஜினின் திறனுக்கமைய இந்த வாகனத்திற்கு 580 இலட்சம் ரூபா வரி செலுத்த வேண்டும் எனவும் இந்த வாகனத்தின் சந்தை பெறுமதி 1190 இலட்சம் எனவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.