Header Ads



4 கோடி ரூபாவை புறக்­க­ணித்து, புதையல் தோண்­டியவர்களை கைதுசெய்த விசேட அதி­ரடிப்படை­

தமக்கு வழங்­கப்­பட்ட நான்கு கோடி ரூபா இலஞ்­சத்தைப் புறக்­க­ணித்து, புதையல் தோண்­டிய சந்­தேக நபர்கள் மூவரை தம்­புள்ளை விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் கைது செய்­துள்­ளனர்.

தலதா மாளி­கைக்கு உரித்­தான கலே­வெல, எத­மல்­பொத, வஹ­கோட்டே பிர­தே­சத்­தி­லுள்ள காணி ஒன்றில் புதையல் தோண்­டு­வ­தற்­காக சில மாதங்­க­ளாக, பாரிய கல் ஒன்றை உடைத்துக் கொண்­டி­ருந்த மூன்று சந்­தேக நபர்­களே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

தம்­புள்ளை பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டையின் புல­னாய்வு பிரி­வுக்குக் கிடைத்த தகவல் ஒன்­றுக்­க­மைய அதி­கா­ரி­களால் நேற்று முன்­தினம் பலத்த மழை பெய்த நிலையில் இந்த சுற்­றி­வ­ளைப்பு இடம்­பெற்­றுள்­ளது. இதன் போதே இம் மூவரும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

பொலிஸ் குழு­வினர் அவ்­வி­டத்தை சுற்­றி­வ­ளைத்த போது, சந்­தேக நபர்கள் இயந்­திரம், உப­க­ர­ணங்­களை பயன்­ப­டுத்தி பாரிய கல் ஒன்றை உடைத்துக் கொண்­டி­ருந்­த­தோடு, சுமார் 25 அடி ஆழ­மான குழி ஒன்றைத் தோண்டி அதனுள் சுரங்கம் ஒன்றை அமைத்து புதையல் தேடிக் கொண்­டி­ருந்­த­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்கள், அப்­ பி­ர­தே­சத்தை சேர்ந்த வர்த்­தகர் ஒரு­வரும், பெக்கோ இயந்­திர உரி­மை­யாளர் மற்றும் கண்டி பிர­தே­சத்தை சேர்ந்த நபர் ஒரு­வரும் என விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

சம்­ப­வத்தை மூடி மறைப்­ப­தற்­காக, சுற்­றி­வ­ளைப்­புக்­காக சென்­றி­ருந்த தம்­புள்ளை பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ ப­டை­யி­ன­ருக்கு, அங்­கி­ருந்த வர்த்­தகர் 4 கோடி ரூபாவை இலஞ்­ச­மாக வழங்க முயற்­சித்த போதிலும், அப் பொலிஸ்­கு­ழு­வினர் அதனைப் புறக்­க­ணித்து சந்­தேக நபர்­களை கைது செய்­துள்­ளனர்.

சந்­தேக நபர்­க­ளி­ட­மி­ருந்து வெடி­ம­ருந்து, டெக்­னேட்டர், எலு­மிச்­சைகள், மின்­சா­ரத்தால் இயங்­கக்­கூ­டிய விசே­ட­மான கல்­லு­டைக்கும் இயந்­திரம், பெகோ இயந்­திரம், பதிவு செய்­யப்­ப­டாத இலக்­கத்­த­க­டுடன் கூடிய மோட்டார் சைக்கிள் மற்றும் மண் அகழ்­வுக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் மேலும் சில உப­க­ர­ணங்கள் என்­பன பொலி­ஸாரால் கைப்பற்றப்­பட்­டுள்­ளன.

பெகோ இயந்­திர உரி­மை­யாளர் கலே­வெல பிர­தே­சத்தை சேர்ந்­த­வ­ரெ­னவும், அவர் மணித்­தி­யால கூலி அடிப்­ப­டையில் புதையல் தோண்ட வந்­துள்­ள­தாகவும் தெரி­விக்க ப்பட்­டுள்­ளது. பொலிஸ் அதி­ரடிப் படை­யினர் அவ்­வி­டத்தை சுற்றி வளைத்­த­போது அங்கு புதையல் தோண்டிக் கொண்­டி­ருந்த மேலும் சிலர் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் சந்தேக நபர்களைக் கைது செய்ததன் பின்னர் சம்பவ இடத்துக்கு கலேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் வரவ ழைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கலேவெல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

(ரெ.கிறிஷ்­ணகாந்)

No comments

Powered by Blogger.