Header Ads



குத்துக்கரணம் ஆரம்பம் - 3 விக்கெட்டுகள் விழுகின்றன

-SO-

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பரப்புரைகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஏட்டிக்குப்போட்டியாக கட்சித்தாவல்கள் இடம்பெற்றுவருவதால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

ஆளுங்கட்சியிலிருந்து எதிரணிக்கும், எதிரணியிலிருந்து ஆளுங்கட்சிக்கும் தாவல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், கூட்டு எதிரணியின் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் கெஹலிய ரம்புக்வெல எம்.பி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார். இதற்கான பேச்சு வெற்றியளித்துள்ளது என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

அத்துடன், மஹிந்த அணியிலிருந்து மேலும் இருவரும் மைத்திரி அணியில் சங்கமிக்கவுள்ளனர். மறுபுறத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே, இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க ஆகியோர் மஹிந்த அணி பக்கம் குத்துக்கரண மடிக்கவுள்ளனர். இது தொடர்பான இரகசியப்பேச்சு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதற்கிடையில் தொகுதி அமைப்பாளர்கள், உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் எனப் பல தரப்புகளிலிருந்தும் "பல்டி' ஆரம்பமாகியுள்ளது. கட்சிகளின் பிரதான பரப்புரைக் கூட்டங்களின்போது இவர்கள் மேடையேறி அங்கத்துவம் பெறும் வகையில் ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. அதேவேளை, முக்கிய உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடுப்பதற்குரிய இறுதிக்கட்ட பேச்சுகளும் இடம்பெற்றுவருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான கெஹலிய ரம்புக்வெல மஹிந்த பக்கம் தாவிய சுதந்திரக் கட்சி உறுப்பினரானார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைவதற்கு அவர் முயற்சி செய்தார். எனினும், ஐ.தே.க. கதவடைப்பு செய்திருந்தது. இந்நிலையிலேயே அவர் சு.கவில் இணையவுள்ளார்.

No comments

Powered by Blogger.