Header Ads



இலங்கையில் 36 இலட்சம் ரூபாயில், அறிமுகமாகும் அதிநவீன கார்


இலங்கை மக்களுக்காக 36 இலட்சம் ரூபாயில் மோட்டார் கார் ஒன்று சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

ஜப்பான் Daihatsu தொழில்நுட்பத்துடன் Perodua நிறுவனம் தயாரிக்கும் இந்த கார், யுனிமோ என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த கார் Bezza என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்படுகின்றது. 36 இலட்சத்தில் இந்த கார் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்ட போதிலும் 3,560,000 ரூபாவுக்கு இந்த கார் விற்பனை செய்யப்படுகின்றது.

இவ்வாறான அதிநவீன தொழில்நுட்பத்துடனான எந்தவொரு காரும் இலங்கையில் சந்தையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவில்லை என வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய கார் 1000CC என்ஜின் திறனை கொண்டுள்ளது. மிகவும் அழகான தோற்றத்தை இந்த கார் எரிபொருள் தொழில்நுட்பங்களும் சிறப்பான முறையிலேயே காணப்படுகிறது.

இந்தக் கார் ASEAN N- CAP 4 Star தர நிலையையும் பெற்றுள்ளது. அதற்கமைய அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் கொண்ட இந்த காரை குறித்த விலையில் பெற்றுக் கொள்வதென்பது இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

5 comments:

  1. It LOOKS ADVERTISING FREE OF CHARGE... Jaffanamuslim.com can advertise this in official way to get some income.

    ReplyDelete
  2. However in Sri lanka vehicles price are so high.

    ReplyDelete
    Replies
    1. தார்பைக்கு முன்று டயர் 8 லாச்சம்

      Delete
    2. This is அதிநவீன கார் oohiiii

      Delete

Powered by Blogger.