Header Ads



341 சபைகளுக்கும் தனித்தனித் திட்டம் - JVP அதிரடி


நாடளாவிய ரீதியில் தனித்துப் போட்டியிடும் கட்சியாக ஜே.வி.பி. உள்ளது.

இக்கட்சி அடிமட்டத்தில் தமது பிரசார நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளதுடன், அடுத்த வாரம் முதல் தீவிர பிரசாரத்தை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கவுள்ளது. இந்நிலையில், நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்கும் தனித்தனியாக அபிவிருத்தித் திட்டங்களை ஜே.வி.பி வகுத்துள்ளது.

கொழும்பு மாநகருக்கு அமைத்துள்ள அபிவிருத்தித் திட்டத்தை எதிர்வரும் 7ஆம் திகதி ஜே.வி.பி. வெளியிடவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் உட்பட்ட வட்டாரங்களில் தமது அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஜே.வி.பி. விளக்கமளிக்கவுள்ளது. இந்தக் கூட்டங்களுக்கு கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தலைமை தாங்கவுள்ளார்.

2 comments:

  1. It is only the JVP that is serious and honest in its plans to develop the country. No party has so far come out with different development plans suitable to each area but the JVP has.

    ReplyDelete
  2. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 5:8)

    ReplyDelete

Powered by Blogger.