Header Ads



'அக்பார் டவுன்' எந்தேரமுல்லை 2 என மாறுகிறது

"அக்பார் டவுன்" என பெயரிடப்பட்ட தேர்தல் தொகுதியை "எந்தேரமுல்லை 02" என மாற்ற, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. 

மஹர பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் கிராம சேவகர் பிரிவுகள் நான்கை இணைத்து அக்பர் டவுன் என பெயரிட அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப் பகுதி மக்களின் கையெழுத்துடன் கூடிய மகஜர் ஒன்று அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது. 

இதன்போது, தேர்தல்கள் ஆணையாளருக்கு அழைப்பை மேற்கொண்ட அமைச்சர், அந்தப் பகுதியை எந்தேரமுல்லை 02 என மாற்றுவது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

2 comments:

  1. (இச்செய்தியின் தலைப்பின் பிரகாரம்) எந்தரமுல்லையிலுள்ள 4 கிராமசேவகர் பிரிவுகள் அக்பர் டவுனுடன் சேர்வது பிரச்சினை என்றால், "அக்பர் டவுன்" எனும் பெயர் எந்தரமுல்லை 2 என மாற்றப்படுவது சிறப்பாக அல்லது திருப்தியாக இருக்குமா அமைச்சரே?. இதன் பிறகு அக்பர் டவுன் எனும் பெயர் இலங்கையில் இருக்காதா என்பதை செய்தியில் தெளிவு படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.