Header Ads



2000 ரூபாவுடன் தொழிலை ஆரம்பித்து, 5000 மில்லியன் சொத்துக்களுக்கு உரிமையாளரான இலங்கையர்

இரண்டாயிரம் ரூபாவுடன் வர்த்தகத்தை ஆரம்பித்த இலங்கையர் ஒருவர், உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளார்.

2000 ரூபாயில் கொழும்பிற்கு வந்து தெற்காசியாவின் மிகப்பெரிய தொழிற்சாலைக்கு இலங்கையர் ஒருவர் உரிமையைாளராகி உள்ளார்.

சம்பத் மாயாகடுவ என்ற நபரே இவ்வாறு வாழ்க்கையில் வென்றுள்ளார்.

2008ஆம் ஆண்டு 2000 ரூபாய் பணத்துடன் கொழும்பிற்கு வந்த குறித்த நபருக்கு மென்பொருள் உருவாக்கம் தொடர்பில் மிகப்பெரிய திறமை காணப்பட்டுள்ளது.

இதனால் அப்போதைய காலப்பகுதியின் பிரபலமான தொலைபேசி நிறுவனம் ஒன்றில் இணைந்து பணியாற்றுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அவரது திறமையை பார்த்த தொலைபேசி நிறுவனம் சிறிது காலத்திலேயே அந்த நிறுவனத்தின் முக்கிய பணியை அவரிடம் வழங்க தீர்மானித்தது.

அதற்கமைய சிம் அட்டைகளை பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களின் தரவுகளை பதிவு செய்யும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அதற்காக அவரால் நிர்மாணிக்கப்பட்ட மென்பொருளையே அவர் பயன்படுத்தியுள்ளார்.

பின்னர் அந்த சேவையில் சிறப்பான இடத்திற்கு வந்தவர் 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் IDEA HOLDINGS என்ற பெயரில் தனது முதலாவது நிறுவனத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.

சம்பத் மாயாகடுவ இந்த நிறுவனத்தின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி சிறந்த வர்த்தகர் என உலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

அத்துடன் தனது நிறுவனத்தினுள் எவ்வித ஆவணங்களும் பயன்படுத்தாமல் Paperless நிறுவனமாக மாற்றி, சுற்றாடல் மீது தான் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது வர்த்தகத்தில் சிறந்த இடத்தை பிடித்தவர் 2012ஆம் ஆண்டு ஆரம்பித்த கூரை மற்றும் சிலிங் விற்பனை நிலைய திட்டம் ஒன்றை நாடு முழுவதும் விஸ்தரித்தார்.

தற்போது 42 தொழில் பிரிவுகளுக்கு அனுமதி பத்திரம் கொண்டுள்ளவராக காணப்படும் சம்பத் மாயாகடுவ, தெற்காசியாவின் மிகப்பெரிய தொழிற்சாலைக்கு உரிமையாளராகியுள்ளார்.

தற்போது அவர் 5000 மில்லியன் ரூபா சொத்துக்களுக்கு உரிமையாளராக உள்ளார். இந்த திறமையான வர்த்தகர் 10 பில்லியன் ரூபா இலக்குடன் 2018ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு தயாராகி உள்ளார்.

3 comments:

  1. திறமையும் முயற்சியுமே மிகப் பெரிய மூலதனம்.

    ReplyDelete

Powered by Blogger.