Header Ads



இஸ்ரேல் அராஜகம், 2 கால்களையும் இழந்த பலஸ்தீனர் சுட்டுக்கொலை

இரு கால்களையும் இழந்த பாலஸ்தீன போராட்டக்காரர் இஸ்ரேல் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த நாளில் இருந்தே போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இதன் போது இரு கால்களையும் இழந்த Ibrahim Abu என்பவர் இஸ்ரேல் ராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

குண்டடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஷிபா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

இதற்கு முன்னரும் கடந்த 2014ம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போதே Ibrahim Abu இரு கால்களையும் இழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது மற்றொரு நபரும் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீன கொடியை ஏந்தியபடி வீல் சேரில் Ibrahim Abu இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

டிரம்பின் அறிவிப்புக்கு பின்னர் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொலை செய்யப்படும் பாலஸ்தீன நபர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.