Header Ads



16,000 திருமணம் செய்வதற்காக, தினமும் பெண்களை வல்லுறவுக்குட்படுத்தி சாமியார் கைது

16,000 பேரை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி தினமும் 10 பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் சாமியார் விரேந்திர தேவ் திக்‌ஷித்தை டில்லி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டில்லியின் ரோகினி என்ற பகுதியில் ஆத்யத்மிக் விஷ்வ வித்யாலயா என்ற ஆசிரமம் உள்ளது. இங்கு சாமியார் விரேந்திர தேவ் திக்‌ஷித் மீது பல பெண்கள் பாலியல் முறைப்பாடு செய்தும் பொலிஸார் கண்டுகொள்ளவில்லை எனவும், பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இங்கிருந்து தப்பி வந்த 32 வயதான ஒரு பெண் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த செவ்வியில், அந்த ஆசிரமத்தில் 100க்கும் அதிகமான பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு சாமியார் விரேந்திர தேவ் திக்‌ஷித்தால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி வருகின்றனர்.

அங்கு இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டு, யாரும் யாரிடமும் பேசக்கூடாது என கட்டளைகள் விதிக்கப்படுவதாகவும், பல பெண்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் என்னையும் பலமுறை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார் என்றும் கூறியுள்ளார். இவரின் செவ்வியைத் தொடர்ந்து அரசு சாரா அமைப்பு அந்த ஆசிரமம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆசிரமத்தை வீடியோ பதிவுடன் ஆய்வு செய்ய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதையடுத்து, டில்லி மேல்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பொலிஸாரின் உதவியுடன் டில்லி பெண்கள் ஆணையம் மற்றும் சிறுவர் நலக் குழு கடந்த வெள்ளிக்கிழமையன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து டில்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறுகையில், மேலும் டில்லியிலுள்ள சாமியாரின் ஆசிரமத்தில் 100க்கும் மேற்பட்ட சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் 40 பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த சாமியாரின் கொடுமையை தாங்க முடியாமல் பல பெண்கள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆசிரமம் ஒரு குகை போல் இருக்கிறது. இதற்குள்ளே செல்வது என்பது மிகவும் கடினமானது. ஒருவேளை ஒருவர் உள்ளே சென்று விட்டால், திரும்பி வருவது என்பது இயலாத ஒன்று. ஆசிரமத்தின் உரிமையாளரான பாபா விரேந்தர் திக்‌ஷித் கைது செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரமத்தின் நிறுவுனரை ஜனவரி 4ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு டில்லி மேல்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் சாமியார் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.

அங்கு பெண்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படவில்லை என்று ஆசிரமம் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதிலுக்கு, மேல்நீதிமன்றம் அப்படியென்றால் அவர்களைச் சுதந்திரமாக விட வேண்டியதுதானே. ஏன் அவர்களை அடைத்து வைத்துள்ளீர்கள் என வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி சி.ஹரி ஷங்கர் ஆகியோர் அடங்கிய குழு ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் ஆன்மிகத்தின் தலைவர் நேர்மையானவர், உண்மையானவராக இருந்தால் ஏன் மேல்நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என கேள்வி எழுப்பினர்.

இதனிடையே சாமியார் பாபா விரேந்தர் திக்‌ஷித், 16000 பேரை திருமணம் செய்ய முயற்சி செய்ததாகவும், 10 பேரை தினமும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவார் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.  சாமியார் ஆசிரமம் பற்றி தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. இந்தியா இதிலும், கொலைகளிலும் பேமஸ், ஆட்சியாளர்கள் ஊழலிலும் இவ்வாறானோரை காப்பதிலும் பேமஸ்.

    ReplyDelete

Powered by Blogger.