Header Ads



இவ்வளவு பிரச்சினைக்கும் SMS தான் காரணம்

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் முக்கியப் பிரச்சினையாக பெற்றோல் தட்டுப்பாடு காணப்படுகின்றது.

எனினும் இந்த பிரச்சினை இவ்வளவு மோசமான பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு காரணம் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி (SMS) என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடு குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் அனைவருக்கும் விசேட அறிவித்தல் ஒன்று குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டது.

இதில் “பெற்றோல் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளார்கள், ஆகவே அனைவரும் தமது வாகனத்திற்கு பெற்றோலை நிரப்பிக்கொள்ளுங்கள்” என அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஒரு குறுஞ்செய்திதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமாக உள்ளது.

மேலும், இதை அறிந்துகொண்ட மக்கள் போத்தல்களில் பெற்றோலை வாங்கிக்கொண்டு வெளியில் கூடுதலான விலைக்கு விற்பனை செய்கின்றார்கள்.

இவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே போத்தல்களில் பெற்றோல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் குறுஞ்செய்தி அனுப்பப்படுமாயின் அது குறித்து ஆராயப்பட வேண்டும். மேலும், இந்த குறுஞ்செய்தி எவ்வாறு அனுப்பப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன் பெற்றோல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பெற்றோலுக்கு மட்டுமே நாட்டில் பிரச்சினை உள்ளது, டீசலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனினும் சில பெற்றோல் நிலையங்களில் டீசலுக்கும் தட்டுப்பாடு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் அவ்வாறு எந்த பிரச்சினையும் இல்லை. எனினும் டீசலுக்கு தட்டுப்பாடு விதிக்கும் பெற்றோல் விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.