Header Ads



எகிப்து தாக்குதலுக்கு, இலங்கை கண்டனம்

எகிப்து சைனாய் பள்ளிவாசல் தொழுகையாளர்களின் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதலை கண்டித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், தொழுகையாளர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது புரிந்துகொள்ள முடியாத கொடூரமாகும் என்று வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்த தாக்குதலில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களிக்கு இலங்கை அரசாங்கமும் மக்களும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் துரிதமாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தின் இந்த தேசிய துக்க தருணத்தில் எகிப்திய அரசங்கத்திற்கு பூரண ஆதரவு தெரிவிப்பதோடு, இலங்கை அரசாங்கமானது, பயங்கரவாதத்தை அதன் எல்லா வடிவங்களிலும் எதிர்த்தது போராட கைகோர்க்குமாறு சர்வதேச சமூகத்தை வேண்டிக்கொள்கிறது என அந்த அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்,இந்த தாக்குதலில் 235 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.