Header Ads



துருக்கியில் ஓரினச் சேர்க்கை, மாநாடுகளுக்கு தடை

துருக்கி தலைநகர் அங்காராவில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஓரினச் சேர்க்கையாளர்களின் திருவிழாக்கள், கண்காட்சிகள், மாநாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணர்வுபூர்வமான விடயங்கள் மற்றும் பொது ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆளுநரின் அலுவலகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் அங்காராவில் கடந்த வாரம் நடைபெறவிருந்த ஜெர்மன் மொழி ஓரினச் சேர்க்கை திரைப்பட விழாவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த புதிய தடை கொண்டுவரப்பட்டுள்ளது.

துருக்கியில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமானது என்றபோதும் நாட்டில் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முதல் பெரும்பான்மை முஸ்லிம் நாடாக துருக்கி 2003 ஆம் ஆண்டு ஓரினச் சேர்க்கை பேரணிக்கு அனுமதி அளித்தபோதும் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பேரணிக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டது.

துருக்கியில் இஸ்லாமிய பின்னணி கொண்ட ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியே ஆட்சியில் உள்ளது. 

No comments

Powered by Blogger.