Header Ads



கிண்ணியாவிலிருந்து மண் அகழ்ந்து, வெளியே கொண்டு செல்லாதே..!


கிண்ணியாவில் இருந்து வெளி மாவட்டத்துக்கு மண் அகழ்ந்து செல்வதை கண்டித்து இன்று (01) காலை 7.30 மணியளவில் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிண்ணியாவிலிந்து அதிகளவான மணல் வெளி மாவட்டங்களான இலங்கையில் உள்ள 24 மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றது.

இதனால் கிண்ணியாவின் இயற்கை வளம் பாதிக்கப்படுகின்றதாகவும், அதிகளவான நில அறிப்பு ஏற்படுவதாகவும் , பார வாகனங்கள் கிண்ணியா நகர வீதியினூடாக செல்வதனால் வீதி விபத்துகள் ஏற்படுகின்றது.

ஆகவே இதனை தடுப்பதற்காக இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலாளர் அலுவலகத்துக்குல் உட்சென்று பிரதேச செயலாளரிடம் கோசமிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலிஸார் வருகை தந்து பிரச்சினை சம்பந்தமாக ஆரம்ப கட்ட விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதன் போது புவிச்சரிதவியல் பொறியலாளரை வரவழைத்து ஆர்ப்பாட்ட தாரர்களுடன் கலந்துரையாடி தீர்வுக்கு கொண்டுவரப்பட்டது.

இதன் போது ஆர்ப்பாட்ட தாரர்களினால் மகஜர் ஒன்றும் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

A.M கீத் 

No comments

Powered by Blogger.