Header Ads



நாளை வரவுசெலவுத் திட்டம், முக்கிய பொருட்களின் விலைகள் இன்று குறைப்பு

இன்று -08- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சில்  இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்து கொண்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் கிலோ கிராம் ஒன்றிற்கு விதிக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தை வரி 39 ரூபாவாலும், பருப்பு கிலோ கிராம் ஒன்றிற்கு விதிக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தை வரி  12 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் ஒரு லீற்றரின் விலை 25 ரூபாவாலும், கருவாட்டிற்காக விதிக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தை வரி 50 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.