Header Ads



பாப்பரசருக்கு பரிசாக கிடைத்த, லாம்போர்கினி ஹுராகுன் கார்


போப் ஆண்டவர் பிரான்சிஸுக்கு லாம்போர்கினி நிறுவனம் தனித்துவமான "லாம்போர்கினி ஹுராகுன் ஸ்போர்ட்ஸ்" காரை பரிசளித்துள்ளது.

எளிமையான வாழ்க்கைக்கு பெயர் பெற்ற போப் ஆண்டவர் காரை பயன்படுத்தப் போவதில்லை என முடிவெடுத்து குறித்த காரில்  கையெழுத்திட்டு  விற்க முடிவுசெய்துள்ளார்.

குறித்த காரை விற்றுக்கிடைக்கும் நிதியை ஐ.எஸ்  தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டு வீடிழந்த ஈராக் கிறிஸ்துவர்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார். 

பொதுவாக இந்த வகை லாம்போர்கினி கார் சுமார் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும்.  ஆனால் போப் கையெழுத்திட்டு விற்கப்படுவதால் கூடுதல் நிதி திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போப்க்கு வருகிற பரிசுகள் எல்லாம் இதுபோன்ற நிதிதிரட்டல்களுக்காகவே பயன்படுத்தப்படுவதாக வாட்டிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் காரை விற்பதன் மூலம் திரட்டப்படும் நிதி  ஐ.எஸ் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டு விபாச்சார தொழிலில் ஈடுபடுத்தப்படுவர்களுக்கான மறுவாழ்வுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் வாடிகன் சபை தெரிவித்துள்ளது.

2 comments:

  1. You are the IS and you are the reformer.

    ReplyDelete
  2. ISIS was made by USA Not By Him.
    He was a respectable person of one community. Never Disrespect anyone.
    Mind your language.

    ReplyDelete

Powered by Blogger.