Header Ads



இலங்கை முஸ்லிம்களின் முட்டாள்தனம்...!

-Safwan Basheer-

அண்மையில் கின்தோட்டையில் கலவரம் நடந்து கொண்டு இருக்கும் பொழுது பேஸ்புக் வட்சப் மாதிரியான சமூகவலைத்தளங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உருப்பினர்களின் தொலைபேசி இலக்கங்களை அவசர அவசரமாக  பகிர்ந்து கொண்டிருந்தது சமூகம்.

அரசியலையும், அரசியல் வாதிகளையும் எவ்வளவு முட்டாள்த்தனமாக இலங்கை முஸ்லிம் சமூகம் புரிந்து வைத்திருக்கிறது என்பதற்கு இது நல்லதொரு உதாரணம்.

பிரச்சினை காலியில் நடக்கிறது கண்டியில், கிழக்கில் வன்னியில் இருக்கும் அரசியல் வாதிகளால் இதற்கு எப்படியான தீர்வுகளை வழங்க முடியும்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தால் எமது தேசியத் தலைவர்களுக்கு ஒரு ஊடகவியளாலர் மாநாடு நடத்தலாம்,

சம்பவ இடத்துக்கு சென்று புகைப்படங்கள் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிடலாம், பாராளுமன்றத்தில் ஒரு உரை நிகழ்த்த ஒரு நல்ல தலைப்பு கிடைக்கும்.

இவர்களால் இவற்றுக்குமேல் என்ன செய்ய முடியும் அப்படி முடிந்தாலும் இவர்கள் ஒன்றும் செய்யப்போவதுமில்லை.

உலகில் முஸ்லிம் நாடுகளுக்கு பாதிப்பு வரும்பொழுது மத்திய கிழக்கு நாடுகள்  குரல் கொடுக்கும், போராடும் என்று நம்புவதும், இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏதாவாது நடக்கும்பொழுது முஸ்லிம் அரசியல் வாதிகள் குரல் கொடுப்பார்கள், போராடுவார்கள்  என்று நம்புவதும் ஒன்றுதான்.

உண்மையில் இந்த தேசிய அரசியல் வாதிகளின் தொலைபேசி இலக்கங்களைப் பகிர்வதற்குப் பதிலாக கின்தோட்டையில் இருக்கும் ஒரு கிராம சேவகரின் தொலைபேசி இலக்கத்தைப் பகிர்ந்தால்  அதைவிட பிரயசோனமாக இருந்திருக்கும்.

எமது முஸ்லிம் சமூகம் பிரதேசத்தில் இருக்கும் அரசியல் வாதிகளுடன் அரச அதிகாரிகளுடன் எந்த தொடர்பையும் பேனுவதில்லை.

ஆனால் பொலிஸ்மா அதிபர் எனது மச்சான்தான் என்ற ரேன்ஜுக்கு கதைவிடுவார்கள்.

பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், மாதிரியான அரச இயந்திரத்தை இயக்கும் அலுவலகங்களுடன் எந்த தொடர்பையும் பேனுவதில்லை. இந்த அலுவலகங்ளில் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும் நம் சமூகத்துக்கு எந்தத் தெளிவும் இருப்பதில்லை.

எனவே என்னதான் ஹக்கீம் வந்து மக்களை சந்தித்துக் கதைத்தாளும், ரிஷாத் பதியுதீன் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தாலும், ஒரு இயற்கை அனர்த்மோ செயற்கை அனர்த்தமோ ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும்பொழுது கிராம சேவகர் வழங்கும் தகவலின்படியும் பிரதேச செயலாளரின் சிபாரிசின்படியுமே அரசாங்கம் நஷ்டயீடு வழங்கும். இந்த நஷ்ட ஈடுகள்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொஞ்சமேனும் ஆறுதலைப்பெற்றுத்தருமே தவிர அசாத் சாலி வந்தார், முஜிபுர்ரஹ்மான் பேசினார் போன்ற செய்திகள் அல்ல.

எனவே இனியேனும் எமது சமூகம் இந்த தேசியத் தலைவர்களின் ஊடகவியளாலர் மாநாடுகளுக்கு தகவல் கொடுத்துக் கொண்டு இருக்காமல்,  பிராந்திய அரசியல் வாதிகளுடன் அரச அதிகாரிகளுடன் ஒரு நல்ல உறவைப் 
பேணி தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

12 comments:

  1. Y3S 100%CORRECT.USEFUL ADVICE

    ReplyDelete
  2. ஏதாவது எழுத வேண்டும் என்று எழுதியுள்ளார் ரிஷாத் பதியுதீன் அங்கு போனது கண்ணை குத்துகிரது, அந்த பகுதி அரசியல் வாதிகள் என்ன செய்தார்கள் என்பதையும் கட்டுரை யாளர்? சொல்லியிருக்கலாம்.

    ReplyDelete
  3. எல்லாவற்றுக்கும் மேலாக இறை தொடர்பை அதிகப்படுத்துங்கள்

    ReplyDelete
  4. You are right, but our GS are thinking we are dead. No point of thinking with them.

    ReplyDelete
  5. Most of the GS are racists in out area similar to Gintota. How many of you aware about this. We face immense issue everyday with GS and DSs.

    ReplyDelete
  6. நல்ல விடயம் ஒன்றை சொன்னீங்க சகோதரா உங்களோடு நானும் உடன்படுகிறேன்.

    ReplyDelete
  7. 100% உன்மையை எழுதியுள்ளார்.பாராட் டுக்கள்.நன்.

    ReplyDelete
  8. very good massage for our society

    ReplyDelete
  9. Those who share this kind of news on social media are the henchmen of politicians. They are helping their masters.

    ReplyDelete
  10. இந்த கட்டுரையாளர் எல்லா அரசியல்வாதிகளையும் பின்தள்ளிவிட்டு, ஒரு GS யினாலும், DS யினாலும் எல்லாவற்றையும் செய்து முடிக்கலாம் என்ற அறியாமையில் எழுதியுள்ளார். கலவரம் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் அதனை இவர்களால் தடுத்து நிறுத்த முடியுமா? நஷ்டயீடு பெறுவதற்காகவா அரசியல்வாதிகளின் தொலைபேசி இலக்கங்கள் அவ்வேளையில் சமூகவலையத்தளங்களில் பரிமாறப்பட்டன?
    எல்லா அரசியல்வாதிகளையும் இயலாதவர்களாக சித்தரிக்க முனைவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
    அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் விடயத்தைக் கேள்வியுற்று வவுனியாவிலிருந்து உடனடியாக விரைந்து சென்று, அப்பகுதி பொலிசாரின் ஆணைகளையும் புறந்தள்ளிவிட்டு களத்தில் நின்று, உரிய அதிகாரிகளையும் (GS or DS அல்ல), பிரதேச அரசியல்வாதிகளையும் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டமையையும், இக்கலவரம் ஏனைய பிரதேசங்களுக்குப் பரவாமல் தடுத்து நிறுத்தியதையும் அப்பிரதேச மக்கள் நன்கு அறிவார்கள். அமைச்சர் பைசர் முஸ்தபாவும் தமது பங்களிப்பை உரிய நேரத்தில் அவரும் ஆற்றியுள்ளார்.
    நஷ்டயீட்டைப் பொறுத்தவரையில், அரசியல்வாதிகளால் மேல்மட்டத்தோடு கதைத்து அவர்களால் கொண்டுவரப்படும் நிதியைத்தான் இந்த GS யும் DS யும் வழங்குகிறார்கள்.
    மக்களது அறியாமைக்காக எல்லா அரசியல்வாதிகளையும் இயலாதவர்களாகவும், சமூக உணர்வு அற்றவர்களாக காட்ட முனைவது தவறாகும். ஏனெனில் அவர்களும் எம்மைப் போன்ற மனிதர்களே.

    ReplyDelete
  11. This Author's bias against the Ministers such as Rishad Badiudeen is very obvious. How could he assume that contacting the GS or DS is going to help? The situation in Gintota was contained due to the intervention of the politicians from the top level. Otherwise, this would have spread to other areas and the casualty would have been much higher. I appreciate Rishad Badiudeen's courage to be with the affected people even though the Police warned him for his own safety! Let me give an advice to the Author, if you cannot appreciate someone's hard effort, at least refrain from throwing mud at him!

    ReplyDelete

Powered by Blogger.