Header Ads



மாணவனின் ஜனாஸா, கோழிக் கூண்டில் கண்டெடுப்பு!


நிந்தவூர்-09ம் பிரிவைச் சேர்ந்த 6ம் தர மாணவன் ஒருவர் இன்று (29) அவரது வீட்டிலுள்ள கோழிக் கூண்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முகம்மது பாயிஸ் முகம்மது நிஹாஜ் (வயது 11) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுபற்றித் தெரியவருவதாவது:-

நிந்தவூர் அல்-மினா வித்தியாலயத்தில் 6ம் தரத்தில் கல்வி பயின்று இன்று இறுதியாண்டுப் பரீட்சை எழுதி விட்டு காலை சுமார் 11.30 மணியளவில்  வீடு சென்ற மாணவன் முகம்மது பாயிஸ் முகம்மது நிஹாஜ் வீட்டிலுள்ள ஏனைய பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவர் பகலுணவு வேளையில் காணாமல் போயுள்ளதாகவும், பின்னர் அவரைத் தேடியலைந்து இறுதியில் அவரது வீட்டுக் கிணற்றடியில் அமைக்கப்பட்டுள்ள கோழிக் கூண்டில் பார்த்த போது அங்கு அவரது உயிரற்ற உடல் காணப்பட்டதாகவும், அதனை உடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் மறணித்த நிஹாஜ்ஜின் தாயின் தாயார் தெரிவித்தார்.

மறணித்த நிஹாஜ்ஜின் தாயும், தந்தையும் வௌ;வேறு திருமணங்கள் முடித்துக் கொண்டு, பிரிந்து வாழ்வதால் நிஹாஜ் சிறுவயதிலிருந்தே தனது தாயின் தாய், தாயின் தந்தை அவர்களிடமே வளர்ந்து வந்துள்ளார் என்பது தெரியவருகிறது.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்படடுள்ள நிஹாஜின் சடலத்தை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம்.நசீல், சம்மாந்தறை பொலிசார் சகிதம் வருகை தந்து சிறுவனின் சடலத்தைப் பார்வையிட்டதோடு, அவரது வீட்டுக்கும் சென்று அவர் மறணமாகிய கோழிக் கூட்டையும் பார்வையிட்டதோடு, உறவினர், அயலவர்களையும் விசாரணை செய்த பின்னர் பிரேத பரிசோதனைக்காக உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

1 comment:

  1. atharawatra kulandhaihale paramarikka nam anaiwarum munwaruwomaha

    ReplyDelete

Powered by Blogger.