November 07, 2017

இன முறுகலுக்கு வித்திடும் அனந்தி, சம்பந்தன் வேடிக்கை பார்க்கிறாரா..?


-Hameed S. Lebbe -

“வியர்வை சிந்தாத உன்னாலும், மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்துவிட முடியாது”

எனவே எனது பேனாவை திறக்கின்றேன் கொஞ்சம் மையை சிந்த விட…..! 

ஐயா சம்மந்தன் அவர்களே !

தமிழர் விடுதலைக்காக போராட களம் கண்ட ஆயுத இயக்கங்களினால் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்பட்டதுடன் முடிவுற்றது என்றே முஸ்லிம்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் அம் மக்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போடுவது போல் உள்ளது. 

கல்முனை மக்களின் கல்முனை உள்ளுராச்சி சபையை 1897 களில் இருந்து 1987 வரை  இருந்தது போன்று தனியாக பிரித்து தாருங்கள் என்ற அம் மக்களின் நியாயமான கோரிக்கையை மலினப்படுத்தும் முன்னால் ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் சமிபகால நடவடிக்கைகள்.

கல்முனை மக்கள் தாங்கள் ஆண்டு வந்த பூர்வீக பூமியை கபளீகரம் செய்ய முயலும் சில தீய சக்திகளுடன் கூட்டுச்சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரங்கேற்றுகின்ற நாடகங்களை பொறுமையுடன் அவதானித்து வருவதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஐயாவை நோக்கி நீங்கள் . 
தமிழ் இன விடுதலைக்கு போராடுகின்றிர்களா ? இல்லை எங்கள் நிலங்களை கபளிகரம் செய்து உங்கள் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட போராடுகின்றிர்களா? என்று கேட்க்க துடிக்கின்றனர்.

வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும் கடந்த கால கசப்பான சம்பவங்கள் இவைகளில் இருந்து விடுபட்டு தமிழ் சகோதரர்களுடன் நட்புறவுடன் வாழவே இம் மக்கள் விரும்புகின்றனர் அவைகளை கேள்விக்கு உட்படுத்தும் விதமாக நடப்பவர்களை கட்டுப்படுத்தும் தார்மீக கடமை உங்களுக்கு இருக்கின்றது என்பதையும் இம்மக்கள் விசனத்துடன் சுட்டிக்காட்டுகின்றனர்.

வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும் என்ற கவிஞ்சர் காசி ஆனந்தன் அவர்களின் கதையையும் உங்களுக்கு நினைவுபடுத்தல் இவ்விடத்தில் பொருத்தமாகும்.
.
புல்மேய்ந்து கொண்டிருந்தது மாடு.
மரத்தில் இருந்த குருவிக்குஞ்சு தாயைக் கேட்டது:-
‘ஏனம்மா மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு இல்லை?”
தாய்க்குருவி சிரித்தது……
‘மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு தேவையில்லை’
என்றது தாய்.
மீண்டும் தாய்க்குருவி சொன்னது:-
‘வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்’ என்று.

இக் கதையில் வரும் வனத்தில் புல் முளைப்பது போல் உள்ளது 

இங்கு உள்ள சில முன்னால் ஆயுததாரிகள் அவர்களின் ஆயுதத்தால் அடைய முடியாததை சில கபட நாடகங்கள் ஊடாக அடைய முயற்சிப்பதும் ஆனந்தி போன்றவர்கள் நுனிப்புல் மேய்வது போல் ஊடகங்கள் முன் வரலாற்ரை திரிபுபடுத்தி பேசுவதும்.

இன முறுகலுக்கு வித்திடும் இது போன்ற நடவடிக்கைகள் உடனே முடிவுக்கு கொண்டுவரப்படுவதுடன் இம் மக்களின் நியாயமான கோரிக்கை உடனே நிறைவேற்றப்பட வேண்டும் என மக்கள் வேண்டுகிறார்கள்.

6 கருத்துரைகள்:

Hon Sampanthan is a very moderate person but Madam Ananthi Sasitharan is a terror minded person.That is the difference. It is very much regret to note here that they haven't learned any lesson from the defeat. They are always for division but not for unity. Madam Ananthi shouldn't forget that the division among the communities will not work in the East and therefore she should refrain from making comments on the Eastern matters instead she can concentrate on Northern matters as she has to do a lot there.

சம்பந்தன் ஐயா, இப்போது சரியான பிசி.

வட மாகாண சபை அங்கத்தவர்கள், முதலமைச்சர் உட்பட, போன்றோரின் உசுப்பேற்றும் அறிக்கைகளைக் கண்டும் காணாமல் விடுவதுதான், மனித குலத்திற்கு நல்லது என்று சம்பந்தன் மட்டுமல்ல, எல்லா இலங்கை மக்களும் நினைக்கிறார்கள்.

இது நியாயமற்ற கோரிக்கை.

முஸ்லிம்களின் பதவி ஆசையால் வந்த கோரிக்கை. நான்காக பிரித்தால் பலருக்கு பதவிகள் கிடைக்கும் தான். ஆனால் மக்களின் வரிப்பணம் இவர்களுக்கான செலவுகளுக்கே போய்விடும்.

எனவே, கல்முனையையும் நான்காக பிரிக்க வேண்டிய தேவையில்லை. சாய்ந்தமருதையும் பிரிக்க தேவையில்லை.

நீங்கள் இந்த நாட்டில் 30 வருடமாக அழித்த பொதுச்சொத்துக்களின் பெறுமதியை சற்று பின்னோக்கிப் பார்த்தால், உமது வாயிலிருந்து இந்த வரிக்பணக்கதையெல்லாம் வராது.

மாகாண சபைகளும் மக்களின் வரிப்பணத்தில்தான் செலவழிக்கப்படுகிறது.

மாகாண சபைகளையும் கலைத்து இல்லாமல் செய்தால் நல்லது.

இது ஒரு ஜனநாயக நாடு.. இந்த நாட்டில் எந்த ஒரு பிரஜையும் தனது கருத்தை தெரிவித்துக் கொள்ள முடியும்... அது ஒரு இனவாத மதவாத கருத்தாக இருந்தாலும் சரி... அந்த அடிப்படையில் ஆனந்தியின் கருத்துக்களை பெரிய பூதாகரமாக வளர்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்... இது சம்பந்தமாக எம்சமூகத்தின் காவலர்கள் என முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்து விலைபேசி விற்பனை செய்யும் அரசியல் வியாபாரிகளின் செயற்பாடுகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டிய காலம் இது.. ஆனந்தியோ அல்லது யோகேஸ்வரனோ எமக்கு முக்கியம் இல்லை... இவர்கள் எப்போதும் இனவாதத்தை முதலீடு செய்து அரசியல் செய்பவர்கள்...

Post a Comment