Header Ads



வாய் திறக்க, மகிந்த தேசப்பிரிய மறுப்பு

உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளமை தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வர்த்தமானி அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளதை அடுத்து, உள்ளூராட்சித் தேர்தல்கள் மேலும் தாமதமாகும் சூழல் எழுந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,

“ இப்போது எந்தக் கருத்தும் சொல்வதற்கில்லை. தற்போதுள்ள நிலையில் நான் என்னால் என்ன கருத்தைக் கூற முடியும்?

புதிய சூழல்நிலை தொடர்பாக, வரும் 25ஆம் நாள் நடைபெறும் தேர்தல்கள் ஆணையத்தின் வாராந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும்” என்று தெரிவித்தார்.

1 comment:

  1. கடந்த ஒன்றரை இரண்டு வருடங்களாக தேர்தல் ஆணையாளா் ஒருவரை மியமிக்க துப்பில்லால ஆணைக்குழு தலைவர். அக்டிங் அலவன்ஸ் பெற்றுக்கொண்டு காலத்தை கடத்தும் உலகிலுள்ள ஒரேயொரு ஆணைக்குழு தலைவர் இவராத்தான் இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.