November 17, 2017

மூக்கில் வைத்து நுகரும் போதை, மண்டைக்கு ஏறி மதிமயங்கும் பிள்ளைகள்

பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை வைத்திருப்பவர்களே…உங்கள் குழந்தை 7-ஆம் வகுப்பைத் தாண்டியிருந்தால், நீங்கள் அவசியம் சில விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கத் தவறாதீர்கள்.

ஏனென்றால், படிக்கும் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று தான், ஒயிட்னர் என்று சொல்லக் கூடியது. இது சாதாரணமாக எல்லா டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் கிடைக்க கூடியது.

மாணவர்கள், தங்கள் நோட்டில், தவறுதலாகவோ, எழுத்துப் பிழையுடன் பாடங்களை எழுதி விட்டால், அதனை அடித்து திருத்துவதற்குப் பதிலாக, இந்த ஒயிட்னர் என்ற திரவத்தின் உதவியால், வெள்ளையாக உள்ள பெயிண்ட் போன்ற திரவத்தை, அதன் மூடியில் உள்ள பிரஷ்ஷின் உதவியால், திருத்தப்பட வேண்டிய வாசகங்களுக்கு நேராக தடவி சிறிது நேரம் காய விடுவார்கள்.

சிறிது நேரத்திலேயே அது உலர்ந்து விடும். பின்னர், நோட்டில் தடவி விட்ட அந்த ஒயிட்னர் மீது, திருத்தி எழுத வேண்டியதை பேனாவில் எழுதி விடுவார்கள். இந்த ஒயிட்னருடன் கலப்பதற்காக, இதனுடன் இன்னொரு சிறிய பாட்டிலும் இணைந்திருக்கும்.

அது தண்ணீர் போன்ற ஒரு திரவம். ஓயிட்னர் பாட்டிலில் உள்ள வெள்ளைச் சாயம் சற்று காய்ந்தவுடன், அதனுடக் கலப்பதற்காகத் தான் தண்ணீர் போன்ற அந்த திரவம் பயன்படுத்தப் படுகிறது. விஷயமே, இந்த தண்ணீர் போன்ற திரவத்தில் தான் இருக்கிறது.

இந்த பாட்டிலின் மூடியைத் திறந்து, இந்த திரவத்தை ஒரு 20 வினாடி, மூக்கில் வைத்து, இழுத்து சுவாசித்தால் போதும். அவ்வளவு தான்! இந்த நெடி மூளைக்குள் சென்று இனம் புரியாத ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். அதை சுவாசிப்பவர்களுக்கு, ஒரு விதமான போதை ஏற்படும்.

அவர்கள் மெல்ல மெல்ல மதி மயங்கத் தொடங்குவார்கள். ஆனால், வெளியே சாதாரணமாக இவர்களைப் பார்க்கின்ற போது, இதனால் ஏற்படக் கூடிய போதையைக் கண்டு பிடிக்க இயலாது. இது, இதனைச் சுவாசிப்பவர்களுக்க மட்டுமே தெரிந்த ரகசிய போதை மருந்து.

இதனைத் துவக்கத்தில் விளையாட்டாக நுகரத் துவங்கும் மாணவர்கள், மெல்ல மெல்ல இதன் போதைக்கு அடிமையாகி விடுகின்றனர் என்பது தான் கொடுமையிலும் கொடுமை! அதனால், இதனை வாங்க வேண்டும் என்று பணம் கேட்கிறார்கள்.

அல்லது, கடைக்குச் செல்லும் பெற்றோர்களையே வாங்கி வரச் சொல்கிறார்கள். விஷயம் அறியாத பெற்றோரும், அது தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்கு அத்தியாவசியத் தேவை என்று, அப்பாவித்தனமாக வாங்கித் தந்து விடுகிறார்கள். இன்று எத்தனையோ, பள்ளிகளில் இந்த திரவம் மாணவர்களிடமிருந்து கைப்பற்றப் படுகிறது.

அதே சமயம், இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளையும், பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள், பெற்றோர்களுக்கு, பக்குவமாக, அவர்களுக்குப் புரியும் விதத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். இது தான் அந்த மாணவர்களின் போதைப் பழக்கத் துவக்கம்.

பிஞ்சிலே நஞ்சை விதைப்பது போல, நல்லது எது? கெட்டது எது? என்று தெரியாத நம் குழந்தைகள் நம் கண் முன்னாலேயே கண்கட்டி வித்தையாக, இப்படிப்பட்ட போதைக்கு அடியாகி இருப்பதை, இன்னும் எத்தனையோ, ஆயிரக் கணக்கான பெற்றோர்கள் அறியாமல், தங்களது பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்

அது மட்டும் போதாது! உங்கள் குழந்தையின் ஒவ்வொரு செய்கையையும், கண்காணித்தவாறு இருங்கள்! அப்போது தான், இந்த மாதிரியான ஆபத்துகளில் உங்கள் குழந்தைகள் வீழ்ந்து விடாமல், தடுத்துப் பாதுகாக்க முடியும்.

இதற்கான நேரத்தை நீங்கள் நிச்சயம் ஒதுக்கித் தான் ஆக வேண்டும். அது பெற்றோராகிய உங்கள் பொறுப்பு. அதே சமயம், இந்த மாதிரி ஆபத்தான உபகரணங்ளை எல்லாம் அரசாங்கம் தடை செய்ய வேண்டும். அதற்குண்டான மாற்று வழியும் உடனடியாக கண்டு பிடிக்கப் பட வேண்டும்….மாணவர்களுக்கு பாதிப்பில்லாமல்….

1 கருத்துரைகள்:

Crazy article by crazy jaffna Muslim.

Post a Comment