Header Ads



ஹிஸ்புல்லாஹ்வின் எல்லை நிர்ணய முன்மொழிவுகள்


மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் மற்றும் எந்தவொரு சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் தயாரிக்கப்பட்ட முன்மொழிவு அறிக்கை மாகாண சபைகள் எல்லை நிர்ணயம் சம்பந்தமாக ஆராய்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இன்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டது. 

மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர், தனது மும்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை ஆணைக்குழுவின் இணைப்பாளர் நளீன் மற்றும் நிர்வாக அதிகாரி ஜயசறி ஆகியோரிடம் கையளித்தார். இதன்போது இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட்டும் கலந்து கொண்டார். 
சமர்ப்பிக்கப்பட்ட எல்லை நிர்ணய முன்மொழிவு அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், 

“மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை – புரிந்துணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையிலும், எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான மும்மொழிவுகள் என்னால் முன்வைக்கப்பட்டுள்ளது. 

எனது யோசனை மூலம் எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் பகைமைகளை மறந்து ஒற்றுமைப்பட்டு செயற்படக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்புக் கூறக்கூடியவராகவும், மக்களது பிரச்சினைகளை நேரடியாக கையாளக்கூடிய வகையிலும் பிரதிநிதித்துவும் பிரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் எந்த இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன.”– என்றார். 

1 comment:

Powered by Blogger.