Header Ads



வெள்ளைக்காரிகளின் உடையைக் கண்டு, ஆத்திரப்பட்ட இலங்கையர் - காலியில் சம்பவம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்ணொருவர் விநோத சம்பவத்திற்கு முகங்கொடுத்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

காலியல் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது அங்கிருந்த சுற்றுலா பெண்ணை, இலங்கையர் ஒருவர் சிங்கள மொழியில் எதிர்கொண்ட வித்தியாசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருமண நிகழ்வின் போது மேற்குலக ஆடை அணிந்திருந்த சுற்றுலா பெண் மீது கோபமடைந்த இலங்கையர் அது குறித்து எச்சரித்துள்ளார்.

எனினும் சிங்கள மொழி அறியாத அந்த பெண் அதனை தவறாக புரிந்து கொண்டு குறித்த இலங்கையருக்கு சிகரட் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இந்த சம்பவம் காலி அருகே கடலோர பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் பதிவாகியுள்ளது.

குறித்த சுற்றுலா ஹோட்டலில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன், புதிதாக திருமணமான தம்பதியினர் உறவினர்கள் பலர் அங்கு வருகைத்தந்திருந்தனர்.

இந்த நிகழ்வின் பங்கேற்பாளர்களில் காலி வீதியின் சில கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு கிராமத்தில் இருந்து குடும்பம் ஒன்று வருகை தந்திருந்தது.

ஹோட்டலுக்கு அருகில் உள்ள கடற்கரையில் பிகினி மற்றும் குளியல் ஆடைகள் பலவற்றில் பல சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டுள்ளனர்.

மிகவும் கலாச்சாரமான கிராம குடும்பத்தினரால் இவர்களின் நாகரிமற்ற உடையை பார்த்து அமைதியாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேரடியாக பெண்கள் குளிக்கும் பகுதிக்கு கோபத்துடன் சென்ற நபர் ஒருவர் அவர்களின் ஆடை குறித்து கடும் கோபத்துடன் விமர்சித்துள்ளார். அத்துடன் அவர்களுக்கு கலாச்சாரத்தையும் அறநெறிகளையும் சிங்கள மொழியில் கற்றுக் கொடுத்துள்ளார்.

இவர் கூறுவது ஒன்றும் புரியாத பெண் ஒருவர் அவருக்கு சிகரெட் ஒன்றையும் தீப்பெட்டியும் வழங்கியுள்ளார்.

சிறந்த கலாச்சாரத்தை கற்பிக்க சென்ற நபருக்கு சிகரெட் வழங்கியமையினால் அங்கிருந்த அனைவரும் அவரை கிண்டல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

4 comments:

  1. இதற்குப் பெயர்தான் 'ஈமானிய உணர்வு'!

    ReplyDelete
  2. when you go to a famous beach you must expect women with bikinis. A LAND LIKE NO OTHER.

    ReplyDelete
  3. கல்யாணத்திற்கு வந்திருந்த பெண்களின் உடைகள், சுற்றுலா வந்திருந்த பெண்ணின் ஆடையைவிட மோசமாக இருந்திருக்கும்.

    என்னமோ, இலங்கைக் கலாசார உடைகள் என்று பீற்றிக்கொள்வதற்கு மட்டும் குறைச்சல் இல்லை.

    ReplyDelete
  4. இந்தப் போட்டோ ஜப்னா முஸ்லிம் க்கு தேவை இல்லை

    ReplyDelete

Powered by Blogger.