Header Ads



“கோட்டாபய கைது செய்யப்பட்டால், பிக்குகள் வீதியில் இறங்குவர் -

கோட்டாபய ராஜபக்சவை அரசு கைது செய்யுமானால், பிக்குகள் பெருமளவில் வீதியில் இறங்கிப் போராடுவர் என முறுத்தட்டுவே ஆனந்த தேரோ கூறியுள்ளார்.

‘தாய் மண்ணைக் காக்கும் தேசிய சக்தி’ (மௌபிம சுரக்குமே ஜாதிக்க பலவேகய) சார்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தற்போதைய அரசு முன்னைய அரசைப் பாரியளவில் பழிவாங்க நினைக்கிறது. இந்த நடவடிக்கைகளின் பேரழிவுகளை நாடு வெகு விரைவில் சந்திக்கும்.

“மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தொல்லைகொடுத்து அதன் மூலம் இன்பம் காணும் அளவில்தான் தற்போதைய அரசு இருக்கிறது.

“அரசியலில் கோட்டாபய ராஜபக்ச இறங்குவதைத் தடுக்கும் முயற்சியாக அவரைக் கைது செய்யவும் அரசு எண்ணியுள்ளதாகத் தெரிகிறது.  கோட்டாபய கைது செய்யப்பட்டால், பெருமளவிலான பிக்குகள் தெருக்களில் இறங்கிப் போராடவுள்ளனர்.”

இவ்வாறு அவர் தெரித்தார்.

2 comments:

  1. இலங்கை வாழ்மக்களே இந்த சாதுகளின் செய்திகளை கேட்டால் நாடு நாசமாகுவது உருதியாகிவிட்டது இந்த உலக இன்பத்துக்காக உள்ள சாது " தாய் மண்ணைக் காக்கும் தேசிய சக்தி" என்று பெயர்வைத்துக்கொண்டு நாட்டை அழிக்கும் திட்டங்களுக்கு உருதுனையாக இருந்துகொண்டு அனியாயத்திற்காக குரல் கொடுக்கின்றான் இலங்கையை பொருத்தமட்டில் இந்த வீனாப்போன அனியாயத்திற்கு துனைபோகும் சாதுகள் சட்டத்திட்கு மேலானவர்கள் என்று தங்கள கருதுகின்றார்கள் அதுபோன்றே அவர்களுக்கு சொந்தமான தேவையான சில கள்ளர்களையும் காப்பாற்ற குரல் கொடுக்கின்றார்கள் இவர்களின் போதனைகளால் பௌத்தமக்கள் எவ்வாறு நட்பண்புகளை அடைவார்கள்??? !!!

    ReplyDelete
  2. அப்போ குற்றம் செய்தவனை சட்டத்தின் முன் நிறுத்த முடியாது பிக்குகளுக்கு பயந்து அரசாங்கம் செய்யதால் நாடு நாசமாய் போகும் நிலைதான் ஏற்படும் நல்ல விடயங்களுக்கு யாருடைய ஆலோசனை வேண்டும் என்றாலும் கேட்கலாம் சட்டத்தை நிலை நாட்ட சிலர் முட்டுக்கட்டை போட்டால் நாடு என்ன ஆவது

    ReplyDelete

Powered by Blogger.