Header Ads



பிக்குகளையும், இராணுவ குடும்பத்தினரையும் வேட்பாளர்களாக நிறுத்துகிறார் மகிந்த

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் போட்டியிடவுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அதிகளவில் பௌத்த பிக்குகளையும், படையினரின் குடும்ப உறுப்பினர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வாக்குகளை அதிகரிப்பதற்காக, தேரவாத பௌத்தத்தை பின்பற்றும் பிக்குகளை அதிகளவில் வேட்பாளர்களாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் இந்தக் கட்சி 25 தொடக்கம் 30 வீதம் வரை பிக்குகளை வேட்பாளர்களாக நிறுத்த திட்டமிட்டுள்ளது.

தற்போது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் பிரதேச மட்டத்தில் இடம்பெற்று வருகிறது.

அதேவேளை, போரில் உயிரிழந்த படையினரின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தவும், பொது்ஜன முன்னணி திட்டமிட்டுள்ளது.

அதிகளவில் பெண் வேட்பாளர்கள் தேவைப்படுவதாலும், படையினரின் குடும்பங்களின் ஆதரவைப் பெறும் நோக்கிலும்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Let Muslim understand the Objective OF Mahinda raja (paksa) then teach him another bitter lesson so that he won't come back again or go along Mna Muna Muttalkal munani. Identify the common enemy join forces.

    ReplyDelete

Powered by Blogger.