Header Ads



அர்ஜுனா மீது, அமைச்சர்கள் பாய்ச்சல்

நாட்டில் எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­ப­டுவ­தற்கு ஏது­வாக அமைந்த கார­ணிகள் குறித்தும் இந்த விவ­கா­ரத்தில் சதித்­திட்டம் ஏதேனும் இடம்­பெற்­றுள்­ளதா என்­பது தொடர்­பிலும் ஆராய்­வ­தற்­காக அமைச்­ச­ரவை உப­குழு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. 

அமைச்­சர்­க­ளான சம்­பிக்க ரண­வக்க,  அநு­ர­பி­ரி­ய­தர்­ஷன யாப்பா, சுசில் பிரே­ம்­ஜ­யந்த ஆகிய மூவரை உள்­ள­டக்­கியே  இந்­தக்­குழு  நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.  

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில்  அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று முற்­பகல் ஜனா­தி­பதி  செய­ல­கத்தில்  நடை­பெற்­றது.  இதன்­போது நாட்டில்  ஏற்­பட்­டுள்ள  எரி­பொருள் தட்­டுப்­பாடு குறித்தும்  அதற்­கான கார­ணங்கள் தொடர்­பிலும்  விரி­வாக ஆரா­யப்­பட்­டது.  

இதன்­போது  பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர்  அர்­ஜுண ரண­துங்க  எரி­பொருள் தட்­டுப்­பாட்­டுக்­கான கார­ணங்கள் தொடர்பில் விளக்­க­ம­ளித்தார். இந்­திய எண்ணெய்க் கம்­பனி கொண்டு வந்த  கப்­பலில் தர­மற்ற எரி­பொருள்  இருந்­த­மை­யினால் அதனை  நிரா­க­ரிக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது.  இதே­போன்று   இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்­திற்கு எரி­பொருள் ஏற்­றிய கப்பல் இலங்­கையை வந்­த­டை­வ­தற்கு கால­தா­மதம் ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­விட  சப்­பு­கஸ்­கந்த எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தில்  எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு செய்ய முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இத்­த­கைய சூழ்­நி­லை­யால்தான்  நாட்டில்  எரி­பொ­ரு­ளுக்கு  தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது என்று அமைச்சர்  விளக்­க­ம­ளித்­துள்­ளார்.

ஆனாலும்  இந்­திய எண்ணெய் கம்­பனி தரம் குறைந்த எரி­பொ­ருளை  கொண்­டு­வந்­தமை  மற்றும்  இலங்கை பெற்­றோ­லி­யக்­கூட்­டுத்­தா­ப­னத்­திற்­கான  எரி­பொருள்  நிரப்­பிய கப்பல் இலங்­கையை வந்­த­டை­வதில் ஏற்­பட்­டுள்ள கால­தா­மதம், எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு செய்­வதில் ஏற்­பட்ட கால தாமதம்  போன்ற விட­யங்­களில் ஏதேனும் சதித்­திட்டம்  உள்­ளதா? என்று   ஆரா­ய­வேண்­டு­மென்று அமைச்­ச­ர­வையில்  கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. 

இத­னை­ய­டுத்து  எரி­பொ­ரு­ளுக்­கான தட்­டுப்­பாடு குறித்தும்  அதற்­கான கார­ணங்­களில் ஏதேனும் சதி இடம்­பெற்­றுள்­ளதா என்­பது குறித்து விசா­ரணை நடத்­து­வ­தற்கு  மூன்று அமைச்­சர்­களைக் கொண்ட குழு­வினை ஜனா­தி­பதி நிய­மித்­துள்ளார். இந்­தக்­குழு இந்த விடயம் குறித்து  விரி­வாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்­ளது. 

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை அடுத்து  இந்த விடயம் குறித்து நீண்­ட­நேரம் ஆராய்ப்­பட்­டுள்­ளது.  இதன்­போது பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் அர்­ஜுணரண­துங்க மீது பல அமைச்­சர்கள்  குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.  முன்னாள் பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் சந்­திம  வீரக்­கொ­டியும், அமைச்சர்  அர்­ஜுணரண­துங்­கவும் பெரும் வாக்கு வாதத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.  

எரி­பொருள்  கையி­ருப்பு தொடர்பில் வாரா­வாரம் அறிக்கை பெறப்­ப­ட­வேண்டும்.  எந்த வித நிலை­மை­யையும் சமா­ளிக்­கும்­வ­கையில்  21 நாட்­க­ளுக்குத் தேவை­யான எரி­பொருள்  எப்­போதும் சேமிப்பில் இருக்­க­வேண்­டி­யது வழ­மை­யாகும். ஆனால் அந்த நடை­முறை தற்­போது பின்­பற்­றப்­ப­ட­வில்லை.  இத­னால்தான்  பெரும் பிரச்­சி­னைக்கு முகம் கொடுக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக அமைச்­சர்கள் இதன்­போது  சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். 

இலங்­கையின் எரி­பொருள் விநி­யோ­கத்தில் இந்­திய எண்­ணெய்க்­கம்­பனி 14 வீதத்­தைத்தான் கையாள்­கின்­றது. எனவே  இந்­திய  எண்­ணெய்க்­கம்­பனி தர­மற்ற  எரி­பொ­ருளை கொண்­டு­வந்­தது  என்­ப­தற்­காக  எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­ப­ட­வேண்­டிய அவ­சியம் நாட்டில் இல்லை.  உரிய  செயற்­றிட்­டத்தை  பின்­பற்­றா­மை­யி­னா­லேயே  இத்­த­கைய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது என்றும் அமைச்­சர்கள் இதன்­போது  விசனம் தெரி­வித்­துள்­ளனர். 

எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­படும் என்று தெரிந்தால் அல்­லது  எரி­பொருள் கப்பல் தாமதம் அடையும் என்­பதை அறிந்­தி­ருந்தால்  உட­ன­டி­யாக இந்­தி­யா­வுடன் தொடர்­பு­கொண்டு மூன்று நாட்­களில் எரி­பொ­ருளை கொண்­டு­வந்­தி­ருக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் சில அமைச்சர்கள்  தமது அதிருப்தியினை தெரிவித்துள்ளனர். 

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் அர்ஜுணரணதுங்க  இந்திய எண்ணெய்க் கம்பனி பிரச்சினைகளை ஏற்படுத்தி  தரம் குறைந்த எரிபொருளை  இலங்கையில் விற்பனை செய்வதற்கு முயற்சிக்கின்றது. அதற்கு  அனுமதிக்க முடியாது. ஆனாலும் எரிபொருள் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என்று  கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.