Header Ads



549 படையினருடன், இலங்கைவரும் சீன போர்க் கப்பல்


சீன கடற்படையின் பயிற்சிக் கப்பலான Qi Jiguang (Hull 83) நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“இத்தாலியில் இருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் மூன்றாவது தரிப்பிடமாக சிறிலங்காவைப் பயன்படுத்தவுள்ளது.

கடந்த செப்ரெம்பர் மாதம், 549 சீன கடற்படையினருடன், 76 நாட்கள் பயிற்சிப் பயணத்தை மேற்கொண்டு, போர்த்துகல் சென்றிருந்த Qi Jiguang, அடுத்து இத்தாலிக்குச் சென்றது. அங்கிலிருந்து புறப்பட்டு கொழும்பு வரவுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் சீனக்கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட இந்தக் கப்பல்,  மிங் அரச குடும்பத்தைச் சேர்ந்த இராணுவ ஜெனரலான Qi Jiguang  நினைவாக, இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சீன கப்பல்படையில் உள்ள மிகப்பெரிய, மிகவும் முன்னேற்றகரமான பயிற்சிக் கப்பல் இதுவாகும்.” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

167 மீற்றர் நீளமும், 2 2மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் 9000 தொன் எடையுள்ளது. இது 22 கடல் மைல் வேகத்தில் பயணம் செய்யக் கூடியது.

No comments

Powered by Blogger.